சர்வதேச கைக்கூலி என்றால் கூட எனக்கு என்னவென்று தெரியாது.. பழி போட்டவர்களுக்கு பாலா விளக்கம்.!!

சமீபமாக பாலா மீது சிலர் குறை சொல்லி வருகின்றனர்.

Bala explanation for those who blamed.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடி திறன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் சமீபத்தில் இவரு நடிப்பில் காந்தி கண்ணாடி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

பாலா பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். ஆனால் சிலர் பாலா வெளிநாட்டு கைக்கூலி என்றும் அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் பொய் என்றும் அதற்கெல்லாம் இன்சூரன்ஸ் இல்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு விளக்கம் கொடுத்த பாலா சர்வதேச கைக்கூலி என்றால் எனக்கு என்னவென்று தெரியாது அப்படி எல்லாம் பேசும்போது எனக்கே அதிர்ச்சியாக உள்ளது நான் வண்டி வாங்கி கொடுக்கிறேன் அதை அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்வார்கள். அதனால் தான் நம்பரை மறைத்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தவறான நம்பர் என்றால் ஆம்புலன்ஸ் எப்படி ஓடும் நான் வாங்கி கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களும் நன்றாகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது நான் சம்பாதித்த என்னோட சொந்த காசுல தான் இதை செய்து வருகிறேன் தயவுசெய்து யாரும் எப்படி பேச வேண்டாம் என கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bala explanation for those who blamed.!!
Bala explanation for those who blamed.!!blamedGandhi KannadiKPY BalaLatest newsTamil cinemavijaytvகலக்கப்போவது யாருகாந்தி கண்ணாடிகுக் வித் கோமாளிபாலா