பட்டமரம் கல்லடி படாது, ஆனால், பழுத்த மரம் கல்லடி படும். அதுபோல, இதோ சில சொல்லடிகளுக்கு, பாலாவின் பதிலடி பார்ப்போம்..
சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், சூர்யா நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ? என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்ப தவறவில்லை.
இச்சூழலில், ‘வணங்கான்’ படத்தின் சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடந்தது. அதில், கலந்துகொண்ட பாலாவிடம் வணங்கானில் சூர்யா நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? என்று கேள்வியை முன்வைத்தார்கள்.
அதற்கு பதிலளித்த பாலா, ‘இப்போதுதான் வணங்கான் ஹிட்டாகிவிட்டதே. மக்கள் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள். பிறகு ஏன் இன்னார் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்; அமிதாப் பச்சன் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்கிற கேள்வியெல்லாம் இப்போது எதற்கு? என்று கூறினார்.
மேலும், பாலாவிடம்.. விஷாலின் உடல்நிலை இப்படி ஆனதற்கு நீங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
‘விஷாலின் உடல்நிலை இப்படி ஆக நான் காரணமா? டாக்டர் சர்ட்டிஃபிக்கேட்தான் வாங்கித் தர முடியும். யாரோ சொல்லியிருக்கிறார் :அவன் இவன்’ படத்தில் விஷாலுடைய கண்களை நான் தைத்துவிட்டேன் என்று. எப்படி ஒருவரின் கண்களை தைக்க முடியும்’ என்று தனது பாணியில் பதிலடி கொடுத்தார்.