பாக்கியலட்சுமி சீரியல் கோபி புகைப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே ஈஸ்வரி இனியாவை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கும் நிலையில் குடும்பத்தினர் இப்போதைக்கு எந்த முடிவு எடுக்க வேண்டாம் என அமைதியாக இருக்கின்றனர் அமிர்தாவும் கர்ப்பமாக இருப்பதால் குடும்பத்தினர் சந்தோஷமாக இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தினமும் அவரது ரசிகர்களுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது பாக்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் அவளும் நானும் என பதிவிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலை மிஸ் பண்ணுவதாகவும் தெரிவித்துள்ளனர்.