Browsing author

Suresh

அஜித் நடிப்பில் மீண்டும் ஆதிக் இயக்கும் படத்தின் ஹீரோயின் ஸ்ரீலீலா?

‘தல’ அஜித் திரையுலகில் அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் மாஸ் காட்டியது. ஆதலால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார். ஏகே64 படம் குறித்து ‘லப்பர் பந்து’ பட நடிகை ஸ்வாசிகா முக்கியமான ஒரு ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. தற்போது, இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இளம் நாயகியான ஸ்ரீலீலாவுடன் அஜித் எப்படி நடிப்பார் […]

நடன இயக்குநரால் அவமானப்பட்டேன்: இஷா கோபிகர் கண்ணீர்..

அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ’ என்ற பாடல் பிரபலம் என்பது தெரிந்ததே. ‘காதல் கவிதை’ படத்தில் பிரசாந்த் ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக இஷா கோபிகர் தற்போது பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. இஷா கோபிகர் வெளிப்படையாக பேசுகையில், ‘தென்னிந்திய படங்களில் ஒன்றில், நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தேன். இது நான் பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு நடந்த சம்பவம். நான் […]

நான் கர்ப்பமாக இருந்தபோது ஒரு தயாரிப்பாளர் மோசமாக நடந்துகொண்டார்: ராதிகா ஆப்தே குற்றச்சாட்டு..

நடிகை ராதிகா ஆப்தே 2012-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பெனடிக்ட் டெய்லரை மணந்தார். முன்னதாக,2011-ல் லண்டனில் இருந்தபோது இருவரும் சந்தித்தனர். அந்த அறிமுகம் காதலாக மலர்ந்து திருமணத்தில் முடிந்தது. கடந்த ஆண்டு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ‘தான் கர்ப்பமாக இருந்தபோது தயாரிப்பாளரிடமிருந்து ஆடம்பர வசதிகள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்றும், கொஞ்சம் அனுதாபம் மட்டுமே எதிர்பார்த்ததாகவும் ராதிகா குறிப்பிட்டுள்ளார். ராதிகா கடைசியாக ‘சிஸ்டர் மிட்நைட்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் 2025 மே 30 […]

ரூ.6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அறிமுக இயக்குநரின் படம், மெகா வசூல் சாதனை..

பான் இந்தியா கலாச்சார ஓட்டத்தில், சிறு பட்ஜெட் படங்கள் அதனை முந்திச் செல்வது ஏன்? என்பது சிந்திக்கத்தக்கது தானே. ஆம், அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’. அதாவது, சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா. இந்த படம் பெரிய அளவில் எவ்வித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவின. ரூ.6 கோடி சின்ன பட்ஜெட்டில் உருவான இப்படம் […]

‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை: 2 பேர் கைது..

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் ‘காலா’ படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவரது உறவினர் ஆசிஃப் குரேஷி கொல்லப்பட்டார். வீட்டின் வாசலில் ஸ்கூட்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதத்தில் முற்றி, கைகலப்பாக மாறி, ஹூமா குரேஷியின் உறவினர் ஆசிஃப் குரேஷி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிஃப் குரேஷி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இது தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை நடத்தி, வீட்டின் வாசலில் […]

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு, முக்கிய அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘கூலி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் தணிக்கைக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. இதனால் பலரும் ஆச்சரியப்பட்டாலும், படக்குழுவினரோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஏ சான்றிதழ் என்பதால் திரையரங்குகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பி.வி.ஆர் மற்றும் ஏஜிஎஸ் திரையரங்குகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பதிவில் ‘ஏ சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். ஏ சான்றிதழ் படங்களுக்கு செல்லும் பொழுது வயதை […]

ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..

பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக வலம் வருகிறார் என்பது தெரிந்ததே. அந்நிலையில், அவர் ஷங்கரின் மகன் அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அவ்வகையில், அப்பாவைப் போல இயக்குநராக ஆவார் எதிர்பார்க்கப்பட்டது. இச்சூழலில், தற்போது அவரை நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்கப்பட்டது. பல முன்னணி இயக்குநர்களும் கதைகள் கூறினார்கள். இறுதியாக, அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவரின் கதையில் அர்ஜித்தை ஹீரோவாக அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான பணிகள் நடைபெற்று […]

இந்தியில் பேசமாட்டேன்: நடிகை கஜோல் கோபம், வைரல் நிகழ்வு..

மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை கஜோல் மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசினார். அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார். இதனால், கோபமடைந்த கஜோல், ‘நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ அவர்களுக்கு புரியும்’ என்று கடுமையான தொனியில் கூறினார். இந்த வீடியோ வலைதளங்களில் உடனடியாக வைரலானது. கஜோலுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு தரப்பும் பதிவிட்டு வருகின்றனர். ‘இந்தி வேண்டாம் என்று நினைப்பவர் இத்தனை வருடங்கள் எதற்காக இந்தி […]

மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு அறிவிப்பு..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் அவருடைய கட்சியினர் ‘கிங்டம்’ பேனர்களை கிழிக்கத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து படத்தினை தயாரித்துள்ள சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் என்ற எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘கிங்டம்’. […]

இந்தி திரையுலகில் ‘கூலி’ படத்துக்காக களமிறங்கிய அமீர்கான்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான். இந்தி தவிர்த்து இதர மொழிகளில் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாக ‘கூலி’ படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்து முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியில் ‘வார் 2’ வெளியாவதால் அப்படத்துக்கே முன்னுரிமை வழங்கி வந்தார்கள். தற்போது ‘கூலி’ படத்துக்காக தாமாக முன்வந்து பி.வி.ஆர் […]