Browsing author

Suresh

அனிருத் இசையில்லாமல், படம் இயக்கமாட்டேன்: லோகேஷ் திட்டவட்டம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’கூலி’ பட ரிலீசுக்கு மறுநாள் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாமல், கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. ஆயினும் வசூலில சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக எந்தவொரு பதிலுமே கூறாமல் இருந்தார் லோகேஷ். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து திரும்பியவர், திரையரங்கிற்கு சென்று மக்களோடு ‘கூலி’ படத்தினை கண்டுகளித்தார். அதனைத் தொடர்ந்து விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ், அங்கு கேள்விகளுக்கு பதிலளித்தார். ’கூலி’ […]

சமுத்திரக்கனி-கவுதம் மேனன் நடிக்கும் படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர்..

இயக்குநரும் நடிகர்களுமான சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘கார்மேனி செல்வம்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகும் இதை, பாத்வே புரொடக்சன்ஸ் சார்பில், அருண் ரங்கராஜூலு தயாரிக்கிறார். யுவராஜ் தக் ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் ராம் சக்ரி தெரிவிக்கையில், ‘அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் […]

‘கூலி’ பட சவுபின் சாகிர், வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கூலி’ படத்தில், தயாள் என்ற கேரக்டரில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திவர் மலையாள நடிகர் சவுபின் சாகிர் என்பது தெரிந்ததே. இவர், ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாகிர் தயாரித்தார். இந்நிலையில், இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் […]

முதலமைச்சருக்கு, பிரபல இயக்குநர் வேண்டுகோள்..

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, தற்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை மறுநாள் இப்படம் வெளியாகவுள்ளது. 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனால், இந்தப் படத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், […]

கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டாம்: ‘பேட் கேர்ள்’ பட இயக்குநர் பேச்சு..

‘பேட் கேர்ள்’ படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் என்பது தெரிந்ததே. இப்படம் தற்போது சர்ச்சைக்குள்ளாகி அதுவே பெரிய விளம்பரமாகவும் ஆகியுள்ளது. வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில, நாளை மறுநாள் 5-ந்தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் குறித்து, இயக்குநர் வர்ஷா பரத் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பேட் கேர்ள் படத்தை தயாரித்தவர்கள், படத்துக்கு ஆதரவாக இருந்தவர்கள், டிரெய்லரை வெளியிட்டவர்கள் உள்பட அனைவரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களின் […]

சிம்பு நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ கதைக்களம் குறித்து வெற்றிமாறன்..

மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள படம் குறித்து வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘வடசென்னை’ படம் தொடங்கப்பட்டபோது, முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் நடைபெறவில்லை. அக்கதையில் தனுஷ் நடிக்க வந்தவுடன், அதனை அவருக்கு ஏற்ற வகையில் மாற்றினேன். இப்போது, சிம்பு நடிக்கவுள்ள படத்தின் கதை என்னவென்றால், முதலில் சிம்பு நடிக்கவிருந்த வடசென்னை கதை தான். ஒரே காலகட்டத்தில் வேறொரு இடத்தில் நடிப்பது மாதிரி இருக்கும். ’வடசென்னை’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களும் […]

வெற்றிமாறனுக்கு, மிஷ்கின் அன்புடன் கோரிக்கை..

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணியில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாக இருந்த ‘வாடிவாசல்’ படம் குறித்த தகவல்கள் காண்போம்.. வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பேட் கேர்ள்’ படம் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து மிஷ்கின் தெரிவிக்கையில், ‘சூர்யாவும், வெற்றிமாறனும் இணைந்தால், நமக்கு ஒரு சிறப்பான படம் கிடைக்கும். அப்படிப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தை சீக்கிரம் தொடங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்றார். பேர்ட் கேர்ள் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘இப்போதைக்கு ‘வாடிவாசல்’ படம் குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. இரண்டு […]

தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி வசூல் சாதனை எப்படி?: சிவகார்த்திகேயன் விளக்கம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வரும் 5-ந்தேதி வெளியாகிறது. இதற்கான ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு சென்று படத்தை ப்ரொமோட் செய்து வருகின்றார். இந்நிலையில், பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் என தெலுங்கில் பல படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை எளிதாக செய்து வருகின்றது. எப்படி, காரணம் என்ன? என்பது குறித்து சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘தெலுங்கில் தயாரிப்பாளர்கள் ஒரு கன்டன்ட்டை நம்பிவிட்டார்கள் என்றால், செலவு செய்ய தயங்கமாட்டார்கள். எந்த […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த திரைப்படம் குறித்து, இயக்குநர் நெல்சன் சூசக தகவல்..

சிம்பு நடிப்பில் வெற்றிமாறன் ஒரு ப்ரோமோ வீடியோவை ஷூட் செய்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் இயக்குநர் நெல்சனும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார். இது குறித்து நெல்சனிடம் , சிம்பு -வெற்றிமாறன் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘நீங்க என்ன எல்லாத்தையும் எங்கிட்டே கேட்குறீங்க, இதெல்லாம் ரகசியம், சொல்லக்கூடாது. இதைச் சொல்ல எனக்கு அனுமதியும் கிடையாது’ என கூறினார். இதன் மூலம் சிம்பு, வெற்றிமாறன் படத்தில் நெல்சன் நடிக்கின்றார் என்றே தெரிகின்றது. ஏற்கனவே வெளியான தகவலின்படி […]

‘மதராஸி’ படத்தில் அனிருத் இசை எப்படி?: சிவகார்த்திகேயன் கருத்து..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படம் வருகிற்5-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷன் நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கு படக்குழு பயணித்து வருகிறது. சிவகார்த்திகேயனும் பங்கேற்றுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘இயக்குநர் முருகதாஸ் சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பல முன்னணி நடிகர்களை இயக்கியவர். அவருடன் இணைந்து பணியாற்றியதில் சந்தோஷம். அதனால் அவருக்கு இந்நேரத்தில் […]