Browsing author

Suresh

பழம்பெரும் நடிகைக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது..

பழம்பெரும் நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடப் பொதுக்குழுவில் மூத்த நடிகை எம்.என்.ராஜத்துக்கு விருது வழங்க உள்ளனர். நடிகை எம்.என்.ராஜம், 1950 முதல் 1960-களின் இறுதிவரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக ரத்தக்கண்ணீர், […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்து, எடிட்டர் விமர்சனம்; வைரல்..

தளபதி விஜய்யின் ‘ஜன நாயகன்’ குறித்து படத்தின் எடிட்டர் பிரதீப் இ. ராகவ் கூறிய தகவல்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தற்போது வைரலாகி வருகின்றது. படம் எப்படி என்பது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘ஜன நாயகன்’ பற்றி ஏதாவது சொன்னால், படத்திலிருந்து என்னை நீக்கிவிடுவார்கள், ஆனால, சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அப்படத்திற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதற்கொரு நேரம் வரவேண்டும். ஆனால் ‘ஜன நாயகன்’ சூப்பராக வந்துள்ளது. 100 சதவீதம் ‘விஜய்யிஸம்’ படத்தில் உள்ளது. […]

நாம் வந்த வழியை மறக்கக்கூடாது: ‘இட்லி கடை’ படம் குறித்து தனுஷ்..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம், ‘இட்லி கடை’. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அக்டோபர் 1-ந்தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படம் குறித்து தனுஷ் தெரிவிக்கையில், ‘அதென்ன இட்லி கடை? இதைவிட சக்தி வாய்ந்த தலைப்பை வைத்திருக்கலாமே’ என்று சிலர் கேட்கிறார்கள். சில படங்களில் ஹீரோவின் பெயரையே […]

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம் அப்டேட்ஸ்..

சூர்யா, ஆர்.ஜே பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்து வருகின்றார். தற்போது இப்படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு குழப்பம் தொடர்ந்துகொண்டே வருகின்றது. அதாவது, இப்படத்தின் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கருப்பு ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்கி இருக்கிறார். இதன் மூலம் இப்படம் விரைவில் வெளியாகும். பொங்கல் பண்டிகையிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ வெளியாக வாய்ப்புகள் உண்டு என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், இப்படத்தின் […]

இவ்வளவு பெரிய வரவேற்பை எதிர்பார்க்கவில்லை: துல்கர் சல்மான் உற்சாகம்..

பட்ஜெட்டைவிட, கதை பிடித்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடுவர். அவ்வகையில் வந்துள்ள படம் லோகோ. டாமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லோகா: சாப்டர் 1’ படம் வரவேற்பு பெற்றுள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனால் உலகமெங்கும் மொத்த வசூலில் ரூ.250 கோடியைத் தாண்டியிருக்கிறது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் துல்கர் சல்மான், ‘எங்களுடைய தயாரிப்பில் 7-வது படம் ’லோகா’. ஆனால், இதுபோல […]

லிங்குசாமி இயக்கத்தில் வித்யாசாகரின் மகன் ஹீரோ?

தனுஷின் அக்கா மகன் பவிஷ், இயக்குநர் மகன் அர்ஜித், கருணாஸின் மகன் கென் கருணாஸ், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய்சேதுபதி என வாரிசுகள் ஹீரோவாக நடித்து வருவது தெரிந்ததே. அவ்வகையில், இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யசாகரின் மகன் ஹர்ஷவர்தனின் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. உண்மையில் லிங்குசாமி இயக்கத்தில் ஹர்ஷவர்தன் அறிமுகமாகவில்லை என்கிறார்கள். அதற்கு முன்னதாகவே முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார் ஹர்ஷவர்தன். […]

குழந்தைக்கும் யானைக்கும் இடையேயான பிணைப்பு: கும்கி-2 படம் குறித்து இயக்குநர்..

தமிழ் சினிமாவில் மைனா, கயல், தொடரி, கும்கி போன்ற படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். இவர் தற்போது கும்கி-2 படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, யானையை மையமாகக் கொண்டு பிரபுசாலமன் இயக்கிய ‘கும்கி’ படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, […]

‘இளைய சூப்பர் ஸ்டார்’ பட்டம்: தனுஷின் உடனடி நடவடிக்கை; வைரல்..

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பட்டம் கொடுத்து அழைப்பது ரசிகர்களுக்கு உற்சாகமான நிகழ்வு என்பது தெரிந்ததே. அவ்வகையில், பல நடிகர்கள் உண்டு எனலாம். இது குறித்து தற்போது வைரலாகும் நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையாளர் தனுஷ். இவரது இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடைசியாக தனுஷின் நடிப்பில் வெளியான ‘குபேரா’ திரைப்படம் தெலுங்கில் வரவேற்பை நிலையில், தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. முன்னதாக, ஓர் […]

தனுஷின் டைரக்‌ஷன் பற்றி, அருண் விஜய் கருத்து..

நடிகர்கள் இயக்குநராவதும், இயக்குநர்கள் நடிகராவதும் தெரிந்ததே. அவ்வகையில் தனுஷின் இயக்கத்தில் நடித்த அருண் விஜய் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீடு சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. இதில், அருண் விஜய் கலந்துகொண்டு பேசுகையில், ‘ராயன் படம் பார்த்த பிறகு, தனுஷின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இவ்வளவு சீக்கிரம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தனுஷை […]

‘இட்லி கடை’ படத்தின் கதை எப்படி உருவானது?: தனுஷ் விளக்கம்..

தனது பால்ய வயதில் நிகழ்ந்த வாழ்வியல் குறித்து, தனுஷ் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தனுஷ் பேசியதாவது, ‘நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் ஊரில் ஒரு இட்லி கடை இருக்கும். தினமும் அந்த இட்லி கடையில் எப்படியாவது இட்லி சாப்பிட […]