Browsing author

Suresh

விஜய் சேதுபதி நடிப்பில் ‘பாக்கெட் நாவல்’ பட அப்டேட்ஸ்..

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இணைந்துள்ள பிரபல கூட்டணியின் பட தகவல்கள் பார்ப்போம்.. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்துக்கு ‘பாக்கெட் நாவல்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் கன்னட நடிகர் ராஜ் பி.ஷெட்டி, மாளவிகா மோகனன் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ […]

விக்ரம் நடிப்பில் ‘மகான்-2’ படம்: கார்த்திக் சுப்பராஜ் அப்டேட்ஸ்..

புதுமுகங்களின் நடிப்பில் திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘மகான் 2-ம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதனை உட்கார்ந்து எழுத வேண்டும். அது 2027 அல்லது 2028-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்’ என தெரிவித்தார். 2022-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மகான்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் […]

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, திரிஷா வக்கீல் நோட்டீஸ்..

‘அரசியலில் விஜய்க்கு அனுபவம் இல்லை’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ‘விஜய் தன் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். முதலில் திரிஷா வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதன் பிறகு ஏதாவது நடக்கலாம்’ என அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில், திரிஷா வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜின் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, ‘பிரபல இந்திய சினிமா நடிகையும், என் கிளையன்ட்டுமான திரிஷா கிருஷ்ணன் தெரிவித்ததன் பேரில் இதை வெளியிடுகிறேன். என் கிளையன்ட் பற்றி […]

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகும் ‘சரஸ்வதி’ பட அப்டேட்ஸ்..

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் […]

தனுஷுடன் ரிலேஷன்ஷிப்: மிருணாள் தாக்குர் விளக்கம்..

மிருணாள் தாக்குர், தான் முதல் முறையாக சித்தாந்த் சதுர்வேதியுடன் சேர்ந்து நடித்த ‘தோ தீவானே ஷெஹர் மெய்ன்’ படத்தை பிப்ரவரி 20-ந்தேதி தியேட்டர்களில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை விளம்பரம் செய்ய செல்லும் இடங்களில் எல்லாம் தனுஷுடனான காதல் மற்றும் கல்யாணம் குறித்து கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி மிருணாள் கூறியதாவது, ‘நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். சரியான நபர் என் வாழ்க்கையில் வரும்போது திருமணம் குறித்து நானே முதல் ஆளாக சோஷியல் […]

அஜித் நடிப்பில் 5-வது படம்: இயக்குநர் சிவா அப்டேட்ஸ்..

அஜித் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் அஜித். இப்படம் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு சிவா, ‘அனைத்தும் சரியாக அமையும்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். அந்தப் படம் எந்த ஜானர் என்பதை மட்டும் இப்போது ரகசியமாக வைத்திருக்கிறோம்’ என பதிலளித்துள்ளார். வீரம், ‘வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களில் […]

புது காதலியுடன் விஜய் வர்மா; சிவ வழிபாட்டில் தமன்னா..

நடிகை தமன்னா மற்றும் நடிகர் விஜய் வர்மா ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். எங்கு சென்றாலும் இருவரிடமும் எப்போது திருமணம் என்கிற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில மாதமாக இருவரும் ஜோடியாக காணப்படாததால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தமன்னாவின் காதலர் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். முன்னதாக தமன்னா ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படத்தில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து நடித்தபோது, காதல் வயப்பட்டதாக […]

குஷ்பூ மகள் அவந்திகா நடிக்கும் ‘ஆரம்பம்’ பட அப்டேட்ஸ்..

குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான சினிமாவில் ‘ஆரம்பம்’ படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சுஜேஷ் ஈப்பன் இயக்குகிறார். அவந்திகாவுக்கு அம்மாவாக நடிக்கிறார் சரிதா. இந்த படத்தின் பூஜை கேரளாவில் நடந்தது. தமிழ் மற்றும் மலையாளத்தில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் போஸ்டர்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தனது திரைப் பயணம் துவங்கியதை சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார் அவந்திகா. ‘ஆரம்பம்’ படத்தில் இந்திரன்ஸ், விஜயராகவன், அல்தாப் சலிம், கலாபவன் ஷாஜோன், விஜி வெங்கடேஷ், ரமேஷ் கோட்டயம், ரஞ்சன் தேவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தற்போது கேரளாவில் […]

சவாலை எதிர்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது: மாளவிகா மோகனன் பேச்சு..

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜனவரி 9-ந்தேதி வெளியானது. இப்படத்தில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்திகுமார் என பலர் நடித்​துள்​ளனர். இப்படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது. இதற்கு பதிலளித்​துள்ள […]

லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ; வைரல்..

தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தற்போது முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து கைதி-2 படப்பிடிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படம் மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், லோகேஷ் கனக​ராஜ் நடிக​ராக அறி​முக​மாகும் படம், ‘டிசி’. இதை ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன் இயக்குகிறார். இந்த மிரட்​டலான ஆக்‌ஷன் படத்தை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. அனிருத் இசை அமைக்​கிறார். இப்படத்தில் தேவ​தாஸ் […]