Browsing author

Suresh

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம் இரண்டு பாகங்கள்: வெற்றிமாறன் தகவல்..

சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. ‘தக் லைஃப்’ ரிலீசுக்கு பின்பாக ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் சிம்பு. அவ்வகையில், வெற்றிமாறன் தெரிவிக்கையில், ‘சிம்புவை வைத்து இயக்கும் படம் 5 எபிசோடுகளாக இருக்கும். தற்போது 1 மணி 15 நிமிடம் படம் உள்ளது. ஒரு எபிசோடு கூட முடியவில்லை. […]

பிரதமர் மோடியின் பயோபிக் ‘மா வந்தே’ திரைப்படம், அப்டேட்ஸ்..

பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் அவரது பாத்திரத்தில் மலையாள சினிமா நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்த அறிவிப்பு பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த படத்துக்கு ‘மா வந்தே’ என பெயரிட்டுள்ளது படக்குழு. ‘ஒரு தாயின் கீதம்’ என்ற டேக்லைனும் இதில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடியின் பால்ய காலம் முதல் தேசிய தலைவரானது வரையிலான அவரது வாழ்க்கை சொல்லப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் பிரதமர் மோடிக்கும், அவரது தாயார் ஹீராபென் […]

சினிமாக்காரர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா?: ரஜினி பதில், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் கூறும்போது, ‘அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான […]

பல கதைகள் வந்தன, தவிர்த்து விட்டேன்: மாளவிகா மோகனன் ஓபன் டாக்..

‘எதுவும் எனக்கு உற்சாகமான கதாபாத்திரங்களாக வரவில்லை’ என தெரிவித்துள்ளார் நடிகை மாளவிகா. இது பற்றிய விவரம் காண்போம்.. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், இப்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியின் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். அவர் மோகன்லாலுடன் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியில் சில படங்களில் நடித்துள்ள அவர், இப்போது இந்தி வாய்ப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘தமிழ், தெலுங்கு […]

இயக்குநர் மிஷ்கின் கொடுத்த ‘கிஸ்’: சுவாரஸ்ய தகவல்..

கதைக்கேற்ற தலைப்பு வைக்கப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’. இதில் கவின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்றைய இளைய தலைமுறையின் காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது. படம் பற்றி இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் யார்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் சேர்ந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் பல வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நானும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் உறுதி செய்தார் கமல்ஹாசன். சேர்ந்து நடிக்கிறோம் என்று சொன்னாரே தவிர, அதை இயக்கப் போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சேர்த்து வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார் லோகேஷ் […]

தனுஷின் மகன் லிங்காவுக்கு ஒரு லவ் ஸ்டோரி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் தற்போது வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் தனுஷ் பற்றி ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் விரும்பி ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பாசிட்டிவான மீம்ஸ். அதாவது, தன் பட விழாக்களுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனுஷ். அப்படி இருக்கும்போது ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவுக்கும் […]

‘லோகோ’ படம் குறித்து, பிரபல இயக்குநர் எச்சரிக்கைக் கருத்து..

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படமான லோகோ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள். இப்போது […]

ரூ.1.65 கோடி தருவதாக சொன்னார்கள், மறுத்து விட்டேன்: நடிகை தனுஸ்ரீ ஓபன் டாக்..

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகிட கலைஞர்கள் விரும்புவர். ஆனால், இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் நடிகை ஒருவர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘அதுபோன்ற ஒரு வீட்டில் என்னால் தங்க முடியாது. நான் என் குடும்பத்துடன் கூட தங்குவதில்லை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இருக்கவும் இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க […]