Browsing author

Suresh

‘மெல்லிசை’ படத்தின் டேக் லைனுக்கு, வெற்றிமாறன் பாராட்டு..

ராம் இயக்கத்தில் வெளியான ‘தங்கமீன்கள்’ படம் அப்பாவுக்கும் மகளுக்குமான பாச உணர்வை மிக இயல்பாக பேசியது. அதில், இடம் பெற்ற ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் தற்போது கிஷோர், தனன்​யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்​தமன், ஜஸ்​வந்த் மணி​கண்​டன், புரோக்​டிவ் பிர​பாகர், கண்​ணன் பாரதி உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘மெல்​லிசை’. ‘அன்பு மட்​டும் அண்​டம் தேடும்’ என்ற டேக்​லைனை​ கொண்​டுள்ள இப்​படத்​தை ‘வெப்​பம் குளிர் […]

மாரி செல்வராஜ் சர்ச்சைப் பேச்சுக்கு, நெட்டிசன்கள் கருத்து..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பைசன் காளமாடன்’ படம் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நிலையில், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு உதாரணம் கூறுகிறேன் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் பேசியது குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். அதாவது மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், பைசன் போன்ற படங்களில் வெள்ளையாக இருக்கும் கேரள நடிகைகளுக்கு கருப்பு மேக்கப் போட்டு […]

தனது சம்பளம் பற்றிய சர்ச்சைகளுக்கு, மமிதா பைஜு விளக்கம்..

ஹெச்.வினோத் இயக்கி வரும் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருக்கிறார் மமிதா பைஜு. விஜய்யுடன் சேர்ந்து நடிக்க கொடுத்து வைத்திருப்பதாகவும், ‘ஜனநாயகன்’ வாய்ப்புக்காக சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்தில் நடிக்க மமிதா பைஜுவுக்கு ரூ.15 கோடி சம்பளம் என வலைதளங்களில் பேசப்பட்டது. முன்னணி ஹீரோயின்களான திரிஷா, நயன்தாராவுக்கே இதுவரை படம் ஒன்றுக்கு ரூ.15 கோடி சம்பளம் கிடைத்தது இல்லை. […]

தனது ஒருதலைக் காதல் பற்றி, சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பெண் அவரிடம், ‘சார், இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டும். சும்மா எதையாவது சொல்லக்கூடாது, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்ல வேண்டும்’ என கேட்டார். அப்போது தயங்காமல், சிவகார்த்திகேயன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தினார். ‘எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால், அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் அவ்வளவு சீக்கிரம் இன்னொரு […]

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ரஜினி படங்களின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில தினங்களில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. விஷால் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் […]

காதலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஆண்களா, பெண்களா?: ராஷ்மிகா விளக்கம்..

நேஷனல் க்ரஷ் என கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உள்ளார். சமீபத்தில், புஷ்பா 2 மற்றும் சாவா படங்களின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களுடன் இந்தியிலும் கவனம் ஈர்த்துள்ளார். இந்தியில் ‘தம்மா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கியுள்ள இந்த ஹாரர் காமெடி திரில்லர் படம் நேற்று திரைக்கு திரைக்கு வந்தது. […]

நானி நடித்த ‘ஓஜி’ பட சர்ச்சைக்கு, இயக்குநர் முற்றுப்புள்ளி..

நாளை 23-ந்தேதி ஓடிடி தளத்தில் ‘ஓஜி’ திரைப்படம் வெளியாகிறது. முன்னதாக, திரையரங்கில் இப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதனிடையே, சில தினங்களாக தயாரிப்பாளர் தனய்யா மற்றும் இயக்குநர் சுஜித் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளை தனது சொந்த பணத்திலேயே இயக்குநர் முடித்ததாகவும் குறிப்பிட்டார்கள். இந்த முரண்பாடால் மட்டுமே நானி படத்தின் தயாரிப்பு பொறுப்பில் இருந்து தனய்யா விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியிட்டார்கள். இது இணையத்தில் வைரலானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் […]

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்ஸ்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காட் மோடு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘கருப்பு’ படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ள விஷயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பகிர்ந்துள்ளதாவது, ‘கருப்பு படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினார்கள். நானும் படத்தை பாத்தேன். நன்றாக வந்துள்ளது. ‘கருப்பு’ அப்டேட்டுக்காக ரசிகர்கள் […]

ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவுறுத்தல்..

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர். திருநெல்வேலியில் இந்த படம் ஓடும் ஒரு திரையரங்கில் துருவ் விக்ரம், அனுபமா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜ் வந்தார். அப்போது படக்குழு பேசிக் கொண்டிருந்தபோது படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் ஆடிக் கொண்டும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்ட மாரி செல்வராஜ் […]

என்னை ஓரங்கட்டி விட்டார்கள்: நடிகை அனுபமா பேச்சு..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படத்தில் துருவ் விக்ரமின் ஜோடியாக நடித்துள்ளார் அனுபமா. இப்படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது. முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் அனுபமா. அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி என்னை ஓரங்கட்டி […]