Browsing author

Suresh

சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படம்: சென்னையில் 16 நாட்கள் ஷுட்டிங்..

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘கங்குவா’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ படம் சூர்யாவின் ரசிகர்களை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது 16 நாட்கள் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பட்டு உள்ளது. இதில் சூர்யா தவிர்த்து இதர நடிகர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. […]

வெங்கட் பிரபு இயக்கி முடித்த ‘பார்ட்டி’ பட வெளியீடு அப்டேட்ஸ்..

சிம்பு-எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ என்ற படம் நல்ல வரவேற்பு பெற்றது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிவகார்த்தியனை இயக்கவுள்ளார் வெங்கட். முன்னதாக, 2018-ம் ஆண்டு அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாரான படம் ‘பார்ட்டி’. ஆனால், பிஜி தீவில் இருந்து வரக்கூடிய சான்றிதழ்கள் கிடைக்க தாமதமானால் படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இப்பிரச்சினை முடிவடைந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சிவா மற்றும் இயக்குநர் வெங்கட் […]

பிரதீப் ரங்கநாதன், அருண் விஜய் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ்..

பாலா இயக்கத்தில் வெளியான ‘வணங்கான்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார் அருண் விஜய். இதனைத் தொடர்ந்து தனுஷ் இயக்கிய ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக நடித்தார். இந்த ‘ இட்லி கடை’ படத்துக்கு முன்னதாக அருண் விஜய் நாயகனாக நடித்து முடித்த படம் ‘ரெட்ட தல’. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது இப்படம் டிசம்பர் 18-ந்தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படமும் […]

சித்தார்த் நடித்துள்ள ‘ரௌடி&கோ’ படத்தின் அப்டேட்ஸ்..

தமிழில் ‘சித்தா’ என்ற படத்தில் சித்தார்த் நடித்ததை தொடர்ந்து, பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் கார்கில் போர் பற்றிய வரலாற்றுக் கதையாகும். இதில், விமானப் படை வீரராக வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து சித்தார்த் நடிக்கும் படத்திற்கு ‘ரெளடி&கோ’ என பெயரிடட்டு டைட்டில் லுக் மட்டும் வெளியிட்டுள்ளது படக்குழு. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் வெளியான படம் ‘டக்கர்’. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் மற்றொரு […]

விஜய்யின் ‘தளபதி கச்சேரி’ பாடல்; இந்திய அளவில் முதலிடம்..

விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ அரசியல் பேசும் படமாக உருவாகி வருவது தெரிந்ததே. இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. வெளியான ஒரு சில மணி […]

இது ஆள்மாறாட்டம், சைபர் குற்றம்: நடிகை ருக்மணி வசந்த் பதிவு

விஜய் சேதுப​தி​ நடித்த ‘ஏஸ்’ படத்தின் மூலம் அறி​முக​மானார் கன்னட நடிகை ருக்​மணி வசந்த். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனைத் தொடர்ந்​து, ஏ.ஆர்.முரு​க​தாஸ் இயக்கிய ‘மத​ராஸி’ படத்​தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி​யாக நடித்திருந்தார். பின்​னர் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்​தில் அவர் நடித்த ‘கனகவதி’ கதா​பாத்​திரம் பான் இந்தியா அளவில் அவரைக் கொண்டு சென்​றுள்​ளது. இதன் மூலம் நேஷனல் க்ரஷ் எனவும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டுள்ளார். இப்படத்தை அடுத்​து, பிர​சாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோ​வாக நடிக்​கும் […]

டிரெண்டிங்கில் சாதனை படைக்கும் ராம்சரண் மற்றும் தனுஷின் பாடல்கள்..

ராஜமவுலி இயக்கத்தில் ‘மெகதீரா’ என்ற படத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் ராம்சரண். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம்சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு ராம்சரண் நடித்துள்ள படம் ‘பெட்டி’. இதனை புச்சிபாபு சனா இயக்கியுள்ளார். ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சிக்கிரி சிக்கிரி’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் இந்தியாவிலேயே அதிவேகமாக […]

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், சத்ய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாறு..

கமல்ஹாசன் நடிப்பில் ‘சத்யா’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் கிருஷ்ணா. இதனைத் தொடர்ந்து ஆளவந்தான், ரஜினியின் ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ பாபா உள்பட பல படங்களை இயக்கி தனித்த முத்திரை பதித்தார். இந்தி, தெலுங்கிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இப்போது புட்டபர்த்தி சத்ய சாய் பாபாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘அனந்தா’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ஸ்ரீ […]

20-ந்தேதி இந்திய திரைப்பட விழா நிகழ்ச்சியில், ரஜினிக்கு கவுரவம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான ‘கூலி’ படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு, சுந்தர்.சி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து ரஜினி-கமல் இணையும் படம் தொடங்கவுள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவாவில், 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, வரும் நவம்பர் 20-ந்தேதிமுதல் நவம்பர் 28-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய […]

கமலின் 237-வது படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள்..

கமல்ஹாசனின் ‘237’ திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. சண்டைப்பயிற்சியாளர்களாக கவனம் பெற்ற அன்பறிவ் சகோதரர்கள் இப்படம் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். ‘கேஜிஎஃப்’ படத்துக்காக இவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. முன்னதாக ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ‘விக்ரம்’, ‘லியோ’, படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிவர்கள் அடுத்து கமலின்‘இந்தியன் 2’, ‘கல்கி’, ‘தக் லைஃப்’ படங்களில் பணியாற்றி உள்ளனர். நீண்டநாட்களாக இப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து கமலின் சமூக வலைதள பக்கத்தில் […]