Browsing author

Suresh

இயக்குனர் மிஷ்கினை கண்டித்த லெனின் பாரதிக்கு, ஜான் மகேந்திரன் வரவேற்பு..

திரைப்பட இயக்குனர்களுக்குள் நிகழும் கருத்து மோதல்கள் புதிதல்ல. அதில், இது வேறு மாதிரி.. அதாவது, இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாட்டில் ராதா’ திரைப்படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசினார். மேலும் அவர் ஆபாச வார்த்தைகளைப் […]

நடிகை தேவயானி இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ படத்திற்கு விருது..

நடிகை தேவயானி இயக்குனராகி, படத்திற்கும் விருதும் பெற்றிருக்கிறார். இது குறித்த முழு விவரம் காண்போம்.. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி சுமார் 100 படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது முதன்முறையாக, எழுதி இயக்கி தயாரித்துள்ள குறும்படமான‌ ‘கைக்குட்டை ராணி’ 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில்,சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்க, எடிட்டர் பி.லெனின் படத்தொகுப்பை கவனிக்க, ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ்.ஒலி வடிவமைப்பையும் செய்துள்ளனர். சுமார் […]

12 விருதுகளை வென்ற ‘சாட்சி பெருமாள்’ திரைப்படம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது; கதை என்ன தெரியுமா?

வாழ்வியலில் நிகழும் எதார்த்தங்களின் தொகுப்பாக, உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் சாட்சி பெருமாள். இப்படம், ஒடிடி.யில் ரிலீஸாகிறது. இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘சாட்சி பெருமாள்’ என்கிற படத்திற்கு மதன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் அசோக் ரங்கராஜன், வி.பி.ராஜசேகர், பாண்டியம்மாள், எம்.ஆர்.கே., வீரா உட்பட பலர் நடித்துள்ளனர். மஸ்தான் இசை அமைத்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆர்.பி.வினு கூறும்போது, ‘பத்திரப் பதிவு அலுவலகங்களில் எப்போதும் சாட்சி கையெழுத்துப் போடுபவர்கள் இருப்பார்கள். அப்படி ஒருவரின் கதைதான் இது. […]

சூர்யா விலகல், விஷால் உடல்நிலை குறித்து, இயக்குனர் பாலா சூடான பதில்..

பட்டமரம் கல்லடி படாது, ஆனால், பழுத்த மரம் கல்லடி படும். அதுபோல, இதோ சில சொல்லடிகளுக்கு, பாலாவின் பதிலடி பார்ப்போம்.. சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை ஆரம்பித்தார். ஆனால், சில காரணங்களால் சூர்யாவும், பாலாவும் அப்படத்தில் பணியாற்ற முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து அந்தப் படத்தை முடித்த பாலா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்தார். படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக அருண் விஜய்யின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், […]

விஜய் நடிப்பில் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறாரா?

தளபதி விஜய்யின் 70-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கலாம் என சொல்லப்படுகிறது. இது பற்றிய நிகழ்வுகள் வருமாறு: ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கிய விஜய் ‘தளபதி-69’ படத்திற்கு பிறகு, நடிப்பிலிருந்து விலக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். இருந்தாலும், அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்களும் திரை பிரபலங்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவிக்கையில், ‘விஜய் பிளான் பி ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன்படி, அரசியலில் இருந்துகொண்டே சற்று கேப் […]

இளையராஜாதான் பலரை குடிகாரனாக மாற்றியது: இயக்குனர் மிஷ்கின் ருசிகர பேச்சு

‘இசைஞானி’ இளையராஜா பலரை குடிகாரனாக மாற்றினாரா? இதோ.. மிஷ்கின் பேசிய விஷயத்திற்குள் போவோம்.. இயக்கத்திலும் நடிப்பிலும் தனது தனித்துவத்தை தவறாமல் காண்பித்து வருகிறார் மிஷ்கின். தற்போது, இவர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘ட்ரெய்ன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம் நடித்திருக்கும் ‘பாட்டில் ராதா’ திரைப்பட விழாவில் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய மிஷ்கின், ‘நான் மிகப்பெரிய குடிகாரன். மதுவை ரசித்து, ருசித்து […]

‘விடாமுயற்சி’ படத்தின் 2-வது சிங்கிள் இன்று வெளியீடு: ‘தல’ ரசிகர்கள் உற்சாகம்..

‘விடாமுயற்சி’ பட 2-வது சிங்கிள் இன்று வெளியானது. இது குறித்து இங்கே பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம், பிப்ரவரி 6-ந்தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே படத்திலிருந்து ‘ஸவதீகா..’ என்ற முதல் சிங்கிள் வெளியானது. அதனை அனிருத்தும், அந்தோணி தாசனும் பாடியிருந்தார்கள். அந்தப் பாடலில் அஜித்தையும், திரிஷாவையும் பார்த்த ரசிகர்கள் இளமை துள்ளலாய் கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக அஜித்தின் நடனமும் அவரது லுக்கும் […]

வெற்றிமாறனின் கதையை டைரக்ட் செய்கிறார் கௌதம் மேனன்; ஹீரோ யார் தெரியுமா?

வெற்றிமாறன் கதை கொடுக்க, கௌதம் மேனன் இயக்க, இதோ ஒரு திரைப்படம் உருவாக இருக்கிறது. இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த்திரையில் தொடர்ந்து நடிப்பில் பயணித்த இயக்குனர் கௌதம் மேனன், தற்போது மீண்டும் படம் இயக்குவதில் பிஸியாகி உள்ளார். மம்முட்டி தயாரித்து நடிக்கும் ‘டோமினிக்  அன்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் வெளியாகும் வேலையும் நடைபெற்று […]

எனது அம்மா அழுததைப்போல், எனது மனைவியும் குழந்தைகளும் அழக்கூடாது: இயக்குநர் பா.ரஞ்சித் உருக்கம்..

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள’ பாட்டில் ராதா’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தினகரன் இயக்கத்தில், குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், மாறன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாட்டில் ராதா’. இந்தப் படம் வரும் 24-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். படம், போதைக்கு அடிமையானவர், அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றார் என்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டிரைலர் நேற்று ஜனவரி 18-ம் தேதி […]

விஜயகாந்த் நடித்த ‘ஹானஸ்ட்ராஜ்’ பட டைட்டிலில், தனுஷ் நடிக்கும் புதிய படம்..

விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ஹானஸ்ட்ராஜ். தற்போது இப்பட டைட்டிலில் தனுஷ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பட ரிலீஸில் பிஸியாக உள்ளார். இச்சூழலில், அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாவதால், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸானது தற்போது பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக இருப்பதாக புதிதாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ‘இட்லி கடை’ என்ற படத்தையும் இயக்கி, […]