Browsing author

Suresh

திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது?: கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

வரலாற்றில் கி.மு, கி.பி. எப்படி முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, அதுபோல தி.மு, தி.பி. பார்க்கப்படுகிறது. அவ்வகையில், கீர்த்தியின் வாய்மொழி பார்ப்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கும், தொழில் அதிபர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12-ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமதியான பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என பேசியிருக்கிறார். ‘திருமணத்திற்கு பிறகு எதுவும் மாறியது போன்று தெரியவில்லை. எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. அது எனக்கு பழகிவிட்டது. ஆனால், ஆண்டனிக்கு […]

தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா கருத்து..

தனுஷ் இயக்கிய திரைப்படத்தைப் பார்த்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் ‘நல்லா’ இருக்கா? இல்லையா? என அவரது கருத்தைப் பார்ப்போம்.. தமிழ்த் திரையில் பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இந்நிலையில், இவர் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் பார்த்த எஸ்.ஜே.சூர்யா. அப்படம் குறித்து கூறியவற்றை காண்போம்.. பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக இருந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தைப் பார்த்துவிட்டு ரெட் ஜெயன்ட் நிறுவனம், மிகவும் […]

எனது பள்ளிக் காலங்கள்: ரஜினி பகிர்ந்த நினைவலைகள்..

எவருக்கும் மறக்க முடியாதது பள்ளிக் காலங்கள். அது அழகான வண்ணங்கோலங்கள். மிக பசுமையானது. அதில், ரஜினி சாரின் நினைவலைகள் இங்கே பார்ப்போம்.. கர்நாடக மாநிலம் பசவனகுடியில் இருக்கும் ஏபிஎஸ் (Acharya Patashala School) பள்ளியில் படித்தார் ரஜினிகாந்த். அந்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் நடந்தது. அந்த நேரத்தில் பாங்காக்கில் இருந்ததால் ரஜினியால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தான் படித்த பள்ளி குறித்து கன்னடத்தில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். ரஜினியின் அந்த […]

நடிகர் சத்யராஜ் பெரியாரிஸ்ட், அவரது மகள் திவ்யா திமுக, மகன் சிபிராஜ் தவெக..

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் சத்யராஜ் குறிப்பிடத்தக்கவர். இங்கே.. அரசியல் கொள்கை என்ற வகையில், அவரது வாரிசுகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றிப் பார்ப்போம்.. நடிகர் சத்யராஜ், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறார் என்பது தெரிந்ததே. இவரது மனைவி பெயர் மகேஸ்வரி, இவர் கடந்த சில ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறார். இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். இதில் சிபிராஜ் சினிமாவில் நடித்து வருகிறார். திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். […]

இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்: நடிகர் ரவிமோகன் பேச்சு..

‘இரவுக்கு பின்னே பகல், பிரிவுக்கு பின்னே உறவு’ இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான் சார்.! அதாவது ரவிமோகன் சார் விஷயத்திற்கு வருவோம்.. ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவிமோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல […]

முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது: நடிகர் யோகிபாபு நம்பிக்கை..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒவ்வொரு திரைப்படமும் முடிந்த பிறகு, கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வைரலானது. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகிபாபு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருக்கிறார். […]

இன்று சுந்தர்.சி பிறந்த நாள்: விஷால் நெகிழ்ச்சியுடன் பேச்சு..

இயக்குனர் சுந்தர்.சி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு விஷால் கூறிய நெகிழ்ச்சியான வார்த்தை பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தற்போதும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்திருக்கிறார் சுந்தர்.சி. ‘கருத்து சொல்கிறேன்’ என போரடிக்க விடாமல், மகிழ்ச்சியை மட்டுமே திரையில் பரிமாறி, குழந்தை முதல் பெரியவர் வரை புன்னகை முகமாக அனைவரது மனங்களிலும் நிறைந்திருக்கிறார். இந்நிலையில், முன்னதாக சுந்தர்.சி-விஷால் கூட்டணி ஆம்பள மற்றும் ஆக்சன் ஆகிய […]

போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்: பரந்தூரில் விஜய் முழக்கம்..

தளபதி விஜய் தனது 69-வது படத்துடன் நடிப்பிலிருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். இது குறித்த அவரது அறிவிப்பு அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இன்று அவரது அரசியல் பயணம் தொடங்கியது எனலாம். இது பற்றிய விஜய் நிகழ்த்திய உரை வருமாறு: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்ட நிலையில், பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

கல்லா கட்டுவதில் முந்துவது விக்ரம் படமா? ரவிமோகன் படமா? வெயிட்டிங்..

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ரவிமோகன் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே. ஆனால், தற்போதைய பாக்ஸ் ஆபீஸை பொறுத்தவரையில், ஒவ்வொருவர் படமும் களத்தில் எதிர்கொள்ளும் நிலைதான். இது குறித்த விவரம் பார்ப்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகம் வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி ரமலான் விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆகிறது. அதே தேதியில், ரவி மோகன் நடித்துள்ள ‘ஜீனி’ படமும் வரவுள்ளது. இந்த இரண்டு […]

வீடியோ பதிவை அழிப்பதற்கு பேரம் பேசிய நயன்தாரா: வைரலாகும் புது சர்ச்சை..

நயன்தாரா தாமதமாக வந்த ஒரு நிகழ்ச்சியி்ல், இதோ பரபரக்கும் சில நிகழ்வுகள்.. அதாவது, மதுரையில் நடந்த ‘பெமி9’ விழாவினை புரமோட் செய்யும் விதமாக, சமூக வலைதள பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு இருந்த விழாவிற்கு நடிகை நயன்தாரா, பிற்பகல் 12 மணிக்கு வருவதாக இருந்தது. ஆனால், மாலை 6 மணிக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நயன்தாராவிடம் யூடியூப்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றபோது அங்கிருந்த ஒருவர், ‘அவங்க நார்மல் பீப்புள் கிடையாது’ என பேசியது மிகவும் டிரெண்டாகி கடுமையாக ட்ரோல் […]