Browsing author

Suresh

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் ஆபிஸில் தொடர் ரெய்டு: ரூ.200 கோடி ஆவணங்கள் பறிமுதல்..

சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு வசம் நடைபெற்ற வருமானவரி சோதனை விவரம் வருமாறு: தளபதி விஜய் நடித்த வாரிசு, ராம்சரண் நடித்த ‘கேம் சேஞ்சர்’ மற்றும் பல தெலுங்கு திரைப்படங்களைத் தயாரித்தவர் தில் ராஜு. இவரது அலுவலகம், வீடு மற்றும் ‘புஷ்பா -2’ தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மற்றும் மேங்கோ மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்டாப்பூர் உள்ளிட்ட […]

ஆவணப்பட விவகாரம்: நயன்தாரா அணிந்த ஆடைகளுக்கும் காப்புரிமை வேண்டும்: தனுஷ் தரப்பு அதிரடி வாதம்..

தனுஷ்-நயன்தாரா இடையே நடைபெற்று வரும் ‘ஆவணப்பட விவகாரம்’ குறித்த விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக எழுந்த காரசார விவாதங்கள் பார்ப்போம்.. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ், ‘கடந்த 2015-ம் ஆண்டு ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரம் மற்றும் ஆடைகள் மீதும் காப்புரிமை பெற்றுள்ளது என்றும், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நயன்தாரா, நெட்ஃபிக்ஸ் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “28 வினாடிகள்” காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம் […]

சிவகார்த்திகேயன் ஹீரோவாக, ரவிமோகன் வில்லனாக நடிக்கும் ‘பராசக்தி’ படம்: அப்டேட்ஸ்..

சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 25-வது திரைப்படம் புறநானூறு கதையா? இல்லை. இப்படம், 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் படம் என கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு (சிவாஜி கணேசன் நடித்த)’பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமான ‘பராசக்தி’ திரைப்படம் 1952-ஆம் ஆண்டு வெளியானது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி […]

திரிஷா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்குகிறாரா?: வைரலாகும் தகவல்கள்..

செம பிஸியில் ஜொலிக்கும் நடிகை திரிஷா, விரைவில் அரசியலில் குதிக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. இது பற்றிய விவரம் காண்போம்.. நடிகை திரிஷா ஆர்.ஜே.பாலாஜி இயக்கும், சூர்யாவின் 45-வது படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள ‘மாசாணி அம்மன்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக நடிக்க உள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்தில் திரிஷா நடித்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், சினிமாவை நடிப்பிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் […]

‘பிரவுன் பியூட்டி’ மோனலிசாவை சினிமாவில் வேறு யாராவது அறிமுகம் செய்யலாம்: ரசிகர்கள் விருப்பம்..

சேற்றில் மலர்ந்தாலும் செந்தாமரை பேரழகு தானே, அதுபோல இதோ மோனலிசா பயோபிக் தொடங்குகிறது எனலாம். இனி, விஷயத்திற்கு வருவோம்.. மத்திய பிரதேசத்தில் இந்தூரை சேர்ந்த 16 வயது மோனலிசா போன்ஸ்லே, மகாகும்பமேளா நடந்த பிரயாக்ராஜ் பகுதியில் தன் பெற்றோருடன் சேர்ந்து ருத்ராட்ச மாலை விற்றார். அவரது கயல் விழிகள், கள்ளமில்லா புன்னகை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. இதில் மயங்கிய ஒருவர், தான் எடுத்த வீடியோவை இன்ஸ்டா போஸ்ட் செய்ய செம வைரலாய் தெறித்தது. அவரது கொள்ளை அழகுக்கு […]

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில், பாலகிருஷ்ணா இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தில் பாலகிருஷ்ணா இணைகிறாரா? என்பது குறித்துக் காண்போம்.. லோகேஷ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா, மலையாள நடிகர் சொப்பின் ஷாகீர், மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த கேமியோ ரோலில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் […]

‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜுவை தொடர்ந்து, ‘புஷ்பா’ இயக்குனர் சுகுமார் வீட்டிலும் ரெய்டு…

பான் இந்திய படமாக வெளிவந்த புஷ்பா வசூலை வாரிக் குவித்துள்ளது. இச்சூழலில், இன்று இப்பட இயக்குனர் சுகுமாரின் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது. இது பற்றிய தகவல்கள் வருமாறு: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தன்னா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த புஷ்பா 2 படம், தற்போது வரை இந்தியாவில் மட்டும் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் சுகுமாரின் ஹைதராபாத் வீட்டில் இன்று அதிகாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்பொழுது […]

ராஷ்மிகாவிடம் இருந்து, நயன்தாரா கற்றுக்கொள்ள வேண்டும்: ரசிகர்கள் அறிவுரை..

‘பட புரொமோஷன் தொடர்பாக, ராஷ்மிகாவிடம் நயன் கற்றுக்கொள்ள வேண்டும்’ என ரசிகர்கள் கூறிய நிகழ்வின் பின்னணி குறித்துப் பார்ப்போம்.. மராட்டிய மன்னர் சத்ரபதி சாம்பாஜி மகாராஜைப் பற்றிய வரலாற்று திரைப்படம் தான் சாவா. இப்படத்தில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று நடைபெறும் ‘சாவா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் […]

சுந்தர்.சி நடிப்பில் கிரைம் த்ரில்லர் மூவி ‘வல்லான்’ திரைப்படம் வெளியாகிறது..

‘மத கஜ ராஜா’ படத்தை இயக்கிய சுந்தர்.சி, ‘வல்லான்’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் குறித்துப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், சுந்தர்.சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு பிறகு வந்த ‘மத கஜ ராஜா’ படம் சாதனை படைத்துள்ளது. அதாவது, இன்றைய டிஜிட்டல் ஆடியன்ஸை திருப்தி அடைய வைத்து, வெறும் வெற்றி என நில்லாமல் ரூபாய் 50 கோடியை நோக்கி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில், மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர்.சி கதை நாயகனாக நடித்துள்ள கிரைம் […]

வெற்றிமாறன் தயாரிப்பில், கருணாஸின் மகன் கென் ஹீரோவாக அறிமுகம்?

விடுதலை படம் மூலம் சூரி ஹீரோ ஆனார். அதுபோல, கருணாஸின் மகனும் ஹீரோ ஆகிறார். இது பற்றிய தகவல்கள் வருமாறு: நடிகர் கருணாஸ், பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கென் என்கிற மகனும் உள்ளார். சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த கென் கருணாஸை, தனது திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்து வந்தார் கருணாஸ். இதையடுத்து, கென் கருணாஸுக்கு, ‘அசுரன்’ படத்தில் தனுஷின் மகனாக நடித்தார் கென். தொடர்ந்து, விடுதலை […]