Browsing author

Suresh

பாஜக.வில் இருந்து விலகி, தவெக.வில் சேர்ந்ததற்கு காரணம்?: நடிகை ரஞ்சனா விளக்கம்..

இதுவரையான அரசியல் வரலாற்றில், கட்சித்தாவலுக்கு ஆயிரம் காரணங்கள் கேட்டாயிற்று. அதில், நடிகை ரஞ்சனா சொல்லும் காரணம் காண்போம்.. ‘ஜனநாயகன்’ படப் பணிகள் முடிந்ததும் தமிழ்நாடு முழுவதும், அரசியல் பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக பிரமுகர் இன்று தவெக.வில் இணைந்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளராக இருந்து வந்தவர் ரஞ்சனா நாச்சியார். இவர் அரசு பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நிலையில் பிரபலமானார். […]

லவ் யூ தலைவா: ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனரின் நெகிழ்ச்சிப் பதிவு

லவ் யூ என்பது பேரன்பினால் எழுவது, பெருமகிழ்ச்சியினால் சொல்வது. இதற்கு பாலின பாகுபாடு கிடையாதுங்க. அவ்வகையில் இந்நிகழ்வு பாருங்க.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ‘கூலி’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை, பிரபல இயக்குனர் சந்தித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் 75% படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் […]

உதயநிதி மகன் இன்பநிதியும், விஜய் மகன் ஜேசன் சஞ்சையும்: நெட்டிசன்ஸ் பார்வை

சினிமா தரும் பிரபலம் அரசியலுக்கு உதவும். மக்களுக்கும் எளிதாக முகம் பரிட்சயமாகும். அவ்வகையில், போட்டி ஏற்படுவது இயல்பு. இது தொடர்பாக, வைரலாகும் நிகழ்வு காண்போம்.. ‘ஜனநாயகன்’ படப்பணியிலும், தவெக அரசியல் பணியிலும் தற்போது பிஸியாக இருக்கிறார் விஜய். இந்நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சையும் திரைப்பட இயக்கும் பணியைத் தொடர்ந்து, பாமகவின் கௌரவ தலைவரான ஜிகே மணி வீட்டு திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில், ஜேசன் விஜய் அப்பாவுக்கு பதிலாக கலந்து […]

இப்படத்தை நீங்கள் பார்த்தால், இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன் தனுஷ் சார்: வைரலாகும் பிரதீப் பதிவு..

பயிற்சியும் முயற்சியும் இருந்தால், இமயமும் இடுப்பளவுதான். இப்ப விஷயத்திற்கு வருவோம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. வசூலில் 50 கோடியை கடந்து கொண்டிருக்கிறது. கோலிவுட்டில், சென்சேஷனல் ஹீரோவாக உருவெடுத்துள்ள பிரதீப்புக்கு அடுத்தடுத்து ஹீரோ வாய்ப்புகள் வருகின்றன. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரதீப்பின் சம்பளம் 15 முதல் 18 கோடி வரை இருக்கும் என […]

700 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்; கதை பற்றி லிங்குசாமி வாய்ஸ்

மகாபாரத “அர்ஜூனன்-அபிமன்யு” கதையை லிங்குசாமி எடுக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 20 வருட கனவுப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தை 2 பாகமாக எடுத்து முடித்தார். ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகமே பாக்ஸ் ஆபிசில் ரூ.500 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது பாகம் […]

‘இந்தியன்-3’ படம் இழந்ததை மீட்டுக் கொடுக்கும்: ஷங்கர் நம்பிக்கை

தோல்வியும் வெற்றியும் கலந்ததே வாழ்க்கை. தோல்வியில் பாடம் கற்றோர் வெற்றியில் அதிகம் மிதக்க மாட்டார்கள். அவ்வகையில், ‘இந்தியன்-3’ படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘இந்தியன்’ திரைப்படம் மெகா ஹிட் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, பல வருடங்களுக்கு பிறகு உருவான ‘இந்தியன்-2’ தோல்வியை சந்தித்தது. பின்னர், ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸானது. இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால், ‘இந்தியன்-3’ படத்திற்கான எதிர்பார்ப்பு வற்றியது. ஆனால், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பின்போது ‘இந்தியன்-3’ பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். […]

விஜய் அரசியல் வருகை குறித்து, எஸ்.ஏ.சந்திரசேகர் மனம் திறந்து பேச்சு

தன்னை உயர்த்திய தமிழ்நாட்டுக்கு, திருப்பிச் செய்ய விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்’ என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்படங்களை இயக்குவதோடு, நடித்தும் வருகிறார். இவர் தற்போது அறிமுக இயக்குனர் நிதின் வேமுபதி இயக்கத்தில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய மகன் விஜய் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் பேசியுள்ளார். ‘நானும் விஜய்யும் […]

லோபட்ஜெட் ‘டிராகன்’ ஹைபட்ஜெட் ‘பாய்ஸ்’: இயக்குனர் ஷங்கர் கருத்துக்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

‘டிராகன்’ படம் பற்றி இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ள பதிவு பார்ப்போம்.. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் தற்போது ரூ.55 கோடி வசூலித்துள்ளது. ரூ.35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக பிரதீப் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படமும் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது. சில நேரங்களில், சிறு பட்ஜெட் படங்கள் அதிக வசூல் குவிக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் படுதோல்வியை சந்திக்கிறது. காரணம், போரடிக்காத ஸ்கிரிப்ட் வொர்க் […]

எம்.பி. ஆகிறார் கமல்ஹாசன்?: வைரமுத்து சூசக தகவல்

‘அடுத்த படத்தின் தலைப்பை யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்’ என கமல்ஹாசனிடம் கூறியுள்ளார் வைரமுத்து. இந்நிகழ்வு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், கமல்-வைரமுத்து இருவரும் பேராளுமைகள். இந்நிலையில், கமல்ஹாசனை சந்தித்திருக்கிறார் வைரமுத்து. அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‘நாளாயிற்று, நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன் அவர்களை. ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை, உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் […]

தனுஷ் போல ஜி.வி.பிரகாஷ்; ஜி.வி.பிரகாஷ் போல தனுஷ்: முடியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை. இதில் வரும் விவாதம் வீண். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. அசுரன், அமரன், லக்கி பாஸ்கர் உள்பட 100 படங்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். மேலும், அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி, விக்ரம் நடித்திருக்கும் ‘வீர தீர சூரன்’ அன்பறிவ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். இசையமைப்பில் பிஸியானாலும் நடிப்பதையும் விடவில்லை. அவ்வகையில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. […]