Browsing author

Suresh

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ பட அரங்கம் பார்த்து அதிசயித்தேன்: வெற்றிமாறன் பேச்சு

இந்திய சினிமாவில் புது ஜானரில் உருவாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் தொடர்பாக, இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் காண்போம்.. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்ஸ்டன்’ ஹீரோவாக நடித்தது மட்டுமன்றி இசையமைத்து, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ‘ஜி.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாக […]

கேவலப் பாட்டுக்காக வெட்கப்படுகிறேன்: ஷ்ரேயா கோஷல் வருத்தத்திற்கு, நெட்டிசன்ஸ் கேள்வி

இழிவான பாட்டு பாடியதற்காக வருத்தம் தெரிவித்த பாடகி ஷ்ரேயாவுக்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகியான ஷ்ரேயா கோஷல், தமிழ் சினிமாவில் நினைத்து நினைத்து பார்த்தேன், இளங்காத்து வீசுதே, முன்பே வா என் அன்பே வா’ என பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் ஒரு “ஹாட்” பாடலை பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அது தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. இந்தியில் 2012-ம் ஆண்டு […]

‘காவாலா’ ஆட்டத்துக்கு போட்டியாக, பூஜாவின் ஹாட் ஸாங்: ‘கூலி’ பட அப்டேட் வெளியீடு

நேற்று தமன்னா ஆடிய ஆட்டமா; இன்று பூஜா போட்ட ஆட்டமா, எது ஹாட்? என நாளைய அப்டேட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி எரியும் தகவல் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘கூலி’ ஷூட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு […]

விஜய்-சங்கீதா வாழ்க்கை பற்றி, எதிர்த்தரப்புக்கு அவ்வளவு அக்கறை, பாசம்: வைரலாகும் கருத்து

விஜய்-சங்கீதா வாழ்க்கை குறித்து, விஜய்யின் தாய் தெரிவித்த தகவல் காண்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் முடிவடைந்ததும் அரசியல் பணியாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவும் நடைபெற்று, அதில் விஜய் முழங்கிய ‘கல்வி’ பற்றிய பேச்சு தற்போது விவாதப் பொருளாகி வருகிறது. இச்சூழலில், விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் பிரச்சினை என்று சில மாதங்களாகவே தகவல் […]

அஜித் படம் ரிலீஸான பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் ஒரே தேதியில் மோதல்

அஜித் படம் ரிலீஸான 20 நாட்களுக்கு பிறகு, விக்ரம்-சூர்யா படங்கள் நேருக்கு நேர் களத்தில் இறங்குகின்றன. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2017-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ பட டீசர் வெளியானது. ஆனால், படப்பிடிப்பு முழுமையாக நடைபெற்று முடிய, நிதி நெருக்கடியால் பல போராட்டங்களை சந்தித்துவிட்டார் கௌதம் மேனன். பின்னர், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கௌதம் மேனன், 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படம் திரையில் வெளியாக இருப்பதாகவும் […]

தனுஷ்-ராஷ்மிகா நடித்த ‘குபேரா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பும்.. விவகாரமும்

‘குபேரா’ டைட்டில் பதிவு தொடர்பாக, ரிலீஸ் தேதியில் மாற்றம் இராது என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ், ‘ராயன்’ படத்தை தொடர்ந்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனிடையே ‘இட்லி கடை’ படத்தையும் இயக்கி நடித்தும் வருகிறார். மேலும், சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார். ‘குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா […]

இது முற்றிலும் வதந்தி: கே.ஜே.யேசுதாஸ் உடல்நிலை குறித்து அவரின் மகன் தகவல்

‘கே.ஜே.யேசுதாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என்று வெளியான தகவல் உண்மையில்லை என தெரிய வந்துள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. 85 வயதாகும் பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் சுமார் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்களை பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. இந்நிலையில், இன்று காலை, யேசுதாசுக்கு திடீர் என உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்த […]

என் கணவரை பற்றிப் பேசாதீர்கள்: நடிகை ப்ரியாமணி கடும் கொதிப்பு

‘இது எனது வாழ்க்கை. இதில் மதம், சாதி பற்றியெல்லாம் ஏன் பேசுகிறீர்கள்’ என கொதிப்படைந்துள்ளார் ப்ரியாமணி. இது பற்றிய விவரம் காண்போம்.. அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்தில் கார்த்தி ஜோடியாக ப்ரியாமணி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தேசிய விருதும் பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வராததால், தெலுங்கில் சில படங்களில் நடித்தார். பின்னர், வாய்ப்புகள் முற்றிலும் நின்றிவிட்ட நிலையில், முஸ்தஃபா என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து செட்டிலானார். தொடர்ந்து தேடிய சினிமா வாய்ப்பில், […]

எல்கேஜி பசங்க சண்டை போடுற மாதிரி இருக்கு: தவெக தலைவர் விஜய் சாடல்

‘இதெல்லாம் ரொம்ப தப்பு ப்ரோ’ என விஜய் பேசியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் பேசுகையில், தவெக 2-ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் சொன்னதும் அரங்கமே விசில் சத்தத்தில் ஸ்தம்பித்தது. அரசியல்னாலே வேறலெவல் தான். இதில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம். யார் யாரை எதிர்ப்பார்கள், […]

சிம்பு நடிக்கவிருக்கும் படக்கதை என்ன?: இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அப்டேட்

‘டிராகன்’ பட இயக்குனர் அஷ்வத்தின்அடுத்த பட அப்டேட் பார்ப்போம்.. சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘STR- 51’ பட போஸ்டரில் சிம்பு ‘god of love’ என்ற ரோலில் நடிப்பதாக குறிப்பிடப்பட்டது. இதை வைத்து, இப்படம் ஃபாண்டஸி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து இன்னும் ஓரிரு மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை இயக்கவிருக்கும் அஸ்வத் மாரிமுத்து, பேசிய தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘டிராகன்’ படம் மிகப்பெரிய […]