Browsing author

Suresh

இளையராஜாவுடன் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் சந்திப்பு: மலரும் நினைவுகள்

இசைஞானி இளையராஜாவும் நடிகர் சிவகுமாரும் பற்றிய மலரும் நினைவலைகள் காண்போம்.. இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் 8-ம் தேதி லண்டனில் தனது சிம்பொனி வேலியண்ட் இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி, ஆசியாவிலேயே முதல் முறையாக சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்தார். 35 நாட்களிலேயே உருவாக்கப்பட்ட இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்த நிலையில், […]

சிஎஸ்கே அணிக்கு அனிருத் தீம் மியூசிக் போட மறுப்பு: ஏன் தெரியுமா?

சிஎஸ்கே அணிக்கு அனிருத் தீம் மியூசிக் இசைக்க மறுப்பு தெரிவித்ததன் பின்னணி என்ன? என்பது பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ படத்தை தொடர்ந்து அனிருத் ‘ஜன நாயகன்’ படத்தில் இசையமைத்து வருகிறார். இப்படம் விஜய்க்கு கடைசிப் படம் என்பதால், ஸ்பெஷலாக பல பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார் என கூறப்படுகிறது. செம பிஸியான நிலையில் அனிருத், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணியாக திகழ்ந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸிற்கு […]

சிம்பொனி படைத்த இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனின் ஆர்கானிக் தொகுப்பு

சிம்பொனி இசைத் தொகுப்பை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு, இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் தனது ஆர்கானிக் தொகுப்பை வழங்கினார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நாஞ்சில் பி.சி. அன்பழகன். இதனைத் தொடர்ந்து அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற திரைப்படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். மேலும், அரசியல் களத்தில் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளராகவும் தொடர்ந்து பயணித்து வருகின்றார். குமரி மாவட்டம், நாஞ்சில் […]

டாப் வியூஸ் ‘சிக்கந்தர்’: ஷாருக்கானை முந்துவாரா சல்மான்கான்?

‘ஜவான்’ பட வசூலை முறியடிக்குமா ‘சிக்கந்தர்’ படம்?. இது தொடர்பாக வியூஸ் என்ற நியூஸ் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்- ராஷ்மிகா நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று ‘சிக்கந்தர் நாச்செ’ எனும் செகண்ட் சிங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. புஷ்பா-2 படத்தில் ‘பீலிங்ஸ்’ பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடியதையே மறக்க வைக்க செய்தார் ராஷ்மிகா மந்தனா. ‘சிக்கந்தர் நாச்சே’ பாடலில் அதிகம் ஆடவில்லை என்றாலும், கவர்ச்சியை தாராளமாக காட்டி கிறங்கடித்துள்ளார். நேற்று […]

மோகன்லால் படத்தை தொடர்ந்து, ரஜினி படத்தை இயக்குகிறார் பிரித்விராஜ்?

ஒரே நாளில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து விடும் என்பது திரைத்துறையில் சாதாரணம். அதற்கு ஆயத்தமாகி அலாட்டா இருப்பதுதான் மிக அவசியம். தற்போது விஷயத்திற்கு வருவோம்.. நடிகராகவும் , இயக்குனராகவும் வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிபர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது அதன் 2-ம் பாகத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில்,மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட […]

நீங்க என்னை இயக்குனீங்க, நான் உங்க மகனை இயக்குறேன்: ஷங்கரிடம் பிரபுதேவா?

ஷங்கர் மகன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறாரா? இது குறித்த தகவல்கள் பார்ப்போம்.. இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா பக்கமே தலைகாட்டாமல் உள்ளார். இளைய மகள் அதிதி, விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஷங்கரின் மகன் அர்ஜித், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. அவர் இயக்கத்தில் […]

‘சிக்கந்தர்’ பட ஸாங், மாஷா அல்லாஹ் மாதிரி; அரபிக் குத்து மாதிரி: வைரல் கமெண்ட்ஸ்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ‘சிக்கந்தர்’ படம் வெளியாகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா நடித்த ‘சிக்கந்தர்’ படம் வருகிற மார்ச் 28-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் ‘ஜோரா ஜபின்’, ‘பம் பம் போலே’ பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான நிலையில் தற்போது ‘சிக்கந்தர் நாச்சே’ என்கிற டைட்டில் ட்ராக் பாடலின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில், இருவரும் வேற லெவலில் ஆடியிருக்கிறார்கள். சல்மான் […]

சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு திரைப் பயணம்: விரைவில் கூலி; ரசிகர்கள் குஷி

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ரிலீஸ் குறித்து பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதற்காக வெளியிடப்பட்ட வீடியோவில், லோகேஷ் கனகராஜ் ‘ஆக்‌ஷன்’ சொல்லும்போது, “ஆக்‌ஷன் சார்” என கூறுகிறார். அதை உன்னிப்பாக கவனிக்கிறார் ரஜினிகாந்த். இந்நிகழ்வை கண்ட ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகிறார்கள். படம் ஆக்‌ஷன் ஜானர் என்பதால், […]

82 வயதிலும் ஷாருக்கானை முந்தி அமிதாப்பச்சன் சாதனை: எப்படி தெரியுமா?

மக்களுக்கும், அரசாங்கத்தும் வெளிப்படையாக வாழும் பிரபலங்களில் அமிதாப் குறிப்பிடத்தக்கவர். ஆம், பாலிவுட் சினிமாவில் 82 வயதான அமிதாப் பச்சன், ஷாருக்கானை முந்தி 2024–2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிக வரி செலுத்தும் பிரபலமாக மாறியுள்ளார். இது குறித்த விவரம் காண்போம்.. அதிக சம்பளம் வாங்கும் அமிதாப் பச்சன், ரூ.92 கோடி வரி செலுத்திய ஷாருக்கானை முந்தியுள்ளார். 2024–25 நிதியாண்டில் ரூ.120 கோடி வரி செலுத்திய அமிதாப் பச்சன் ரூ.350 கோடி வருவாயை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. அமிதாப் பச்சன் பல […]

சர்வதேச கடத்தல் கும்பலுடன் நடிகை ரன்யாராவ் தொடர்பு

திருமணமான ஒரே மாதத்தில் ரன்யாராவை விட்டு பிரிந்துவிட்டதாக கணவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நடிகை ரன்யா ராவ், துபாயிலிருந்து 14.8 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையம் வந்த நிலையில் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, ரூ.2.67 கோடி ரொக்கப் பணமும், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரன்யா ராவை விசாரித்தபோது, அவர் சர்வதேச தங்கக் கடத்தல் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர். இந்த வழக்கில் தான் […]