Browsing author

Suresh

மணிரத்னம் இயக்கிய படம் ரீரிலீஸ் ஆனால், தியேட்டர்கள் எரியும்: ராஜீவ் மேனன் கருத்து

மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் ஜுன் மாதம் வெளியாகிறது என்பது தெரிந்ததே. இச்சூழலில், அவர் முன்னதாக இயக்கிய ‘பம்பாய்’ படம் ரீரிலீஸானால் வரவேற்பு எப்படி இருக்கும்? இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1995-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு, நாடு முழுவதும் கலவர பூமியாக இருந்தது. வன்முறை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் ‘பம்பாய்’ திரைப்படம் இயக்கியிருந்தார். இந்து பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இப்படத்தின் […]

போதையில் நடிகையிடம் தவறாக நடக்கவில்லை: போலீஸில் வில்லன் நடிகர் வாக்குமூலம்

நடிகை தெரிவித்த புகாருக்கு, வில்லன் நடிகர் ஷைன் டாம் கூறிய தகவல்கள்… மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சூத்ரவாக்கியம்’ என்ற படத்தின் ஷுட்டிங்கின்போது ஷைன் டாம், போதையில் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாக மலையாள நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். பிலிம் சேம்பரிலும் புகார் தெரிவித்தார். இந்த பரபரப்பு ஒருபுறம் இருக்க, கொச்சியில் உள்ள ஓட்டலில் […]

நடிகை சமந்தா மீண்டும் காதல் திருமணம்; ரசிகர்கள் அறிவுறுத்தல்

‘நாக சைதன்யாவை பிரிந்த பிறகு, சமந்தா மீண்டும் காதலித்து திருமண வாழ்வில் இணையவுள்ளார்’ என்ற தகவல் பரவுகிறது. இது பற்றி அவரது ரசிகர்களின் கருத்துகளை காண்போம்.. ஃபேமிலி மேன், சிடாடல் ஹனி பன்னி ஆகிய வெப் தொடர்களை இயக்கியவர் ராஜ் நிடிமொரு. இவரும் சமந்தாவும் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் கணிக்கின்றனர். ‘ராஜ் நிடிமொருவுக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ராஜுவும், சமந்தாவும் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது சமந்தா சுடிதார் அணிந்தும், […]

டப்பா ரோலை விட, ஆன்ட்டி ரோலில் நடிக்கலாம்: நடிகை சிம்ரன் ‘பளார்’ பதிலடி

சிறந்த டான்ஸர் & சிறந்த ஆர்டிஸ்ட் என்பது சிம்ரன் என்பதை திரையுலகம் அறியும். இந்நிலையில், அவர் பகிர்ந்த நிகழ்வு ஒன்றை காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் சிம்ரன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில், அஜித் அவரை கலாய்க்கும் விதமாக (அதாவது, வாலி படத்தை நினைவுகூரும் விதமாக) ‘இடுப்பை பத்திரமாக பார்த்துக்கோங்க’ என்பார். பின்பு, ‘இல்லை, உடம்பை பார்த்துக்கோ’ என சொல்வார். இந்த காட்சிக்கு விசில் சத்தம் பறந்தன. சிம்ரன் ஆடிய ‘சுல்தானா’ […]

என் கண்ணாடிப் பூவுக்கு நன்றி: நெஞ்சம் நெகிழ்ந்த சூர்யா வாய்ஸ், வைரல்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் இசை- டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யா பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ‘ரெட்ரோ என்பது நாம் கடந்து வந்த காலத்தை குறிக்கும் சொல். நான் கடந்து வந்த இந்த 25, 30 ஆண்டுகளை என்னால் மறக்கவே முடியாது. கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இப்போது அவருடன் சேர்ந்து பணியாற்றும் […]

நான் ராமர் இல்லை, அவருடைய அப்பா வழி: வைரலாகும் கமலின் கல்யாண கருத்து

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்த தனது ‘கல்யாணம் பற்றிய கருத்து’ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, விழாவில் திரிஷா பேசும்போது, ‘இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புகூட எப்போ நடிக்கப் போறீங்கனு கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. அபிராமியும் நானும் நல்ல ஃபிரெண்ட்ஸ். மணி சார் […]

மே 3-ம் தேதி முதல், வொண்டர்மென்ட் டூர்: ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் சுற்றுப்பயணம்

‘தன் மீதான விமர்சனங்களை ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை’ என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இது தொடர்பான தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படம் ஜுன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் அவர் ‘தக் லைஃப்’ இசைப்பணி மற்றும் மணிரத்னம் உடனான நட்பு போன்றவை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், அவர் தெரிவிக்கையில், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர்கள் என்று பலரின் துணை இருப்பதால் தான், என்னால் பல ஆல்பங்களை தயாரிக்க முடிகிறது. […]

சுந்தர்.சி உடன் பிரிவுக்கு காரணம் என்ன? வடிவேலு மனம் திறந்த பேச்சு

இயக்குனர் சுந்தர்.சி உடன் பணிபுரிவதில் இத்தனை ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது பற்றி வடிவேலு கூறிய தகவல் காண்போம்.. வின்னர், ரெண்டு, கிரி, தலைநகரம் என சுந்தர்.சி-வடிவேலு காம்போ ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்களின் கூட்டணி ‘கேங்கர்ஸ்’ படத்தில் இணைந்திருக்கிறது. இப்படம் வருகிற 24-ந்தேதி வெளியாகிறது. இது குறித்து பேசிய வடிவேலு, ‘சுந்தர்சிக்கும் எனக்கும் ஒரு நூலிழை விரிசல்தான். அதை வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் பெரிதாக்கி […]

எனக்கொரு முத்தம் தருவாயா?: நடிகை மாளவிகா பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்

மர்மநபர் ஒருவர் தன்னிடம் முத்தம் கேட்ட சம்பவத்தை மாளவிகா மோகனன் கூறியுள்ளார். இது குறித்த அவரது நினைவலைகள் பார்ப்போம்.. மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தொடர்ந்து மலையாளம் படங்களிலும் நடித்துள்ளளார். மேலும், பாலிவுட்டிலும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, விரைவில் பிரபாசின் ‘தி ராஜா சாப்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். மலையாளத்தில், சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஹிருதயபூர்வம்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் கல்லூரி படித்தபோது சந்தித்த சம்பவத்தை மாளவிகா மோகனன் […]

பிராமணர்களே, நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்கிறேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ச்சை பேச்சு..

பிராமணர்கள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு அனுராக் மன்னிப்பு கேட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், தனது வலைப்பக்கத்தில், ‘பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டிருந்தார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்டும் ‘பஞ்சாப் 95’, ‘டீஸ்’, ‘தடக் 2’ போன்ற பிற படங்களும் தணிக்கை […]