Browsing author

Suresh

மருமகன் ரோபோ சங்கரால், CM லெவலில் ரமேஷ் கண்ணா: ‘அம்பி’ பட சுவாரஸ்யம்

அதிர்ஷ்டக்கார மருமகன் ரோபோ சங்கரால், ரமேஷ் கண்ணா முதலமைச்சர் ரேஞ்சிற்கு உயர்ந்து விட்டாரா? என்கிற ‘அம்பி’ படத்தின் காமெடி சரவெடி பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத்தில் பிரதீஷ் நடிப்பில் ‘ரோல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ‘ரோபோ’ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் கோடை விடுமுறையை […]

ரேஸ் பற்றி கமல் பேச்சு ட்ரோல்: ஏகே ஃபேன்ஸ் செம பதிலடி

யாரோ எப்போதோ எதற்கோ பேசிய தகவல்களை எடிட் செய்து, தற்போது ட்ரோல் செய்வது கூட ஓவர் சேட்டை தான். அப்படியொரு நிகழ்வு காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இச்சூழலில், கமல்ஹாசன் ட்ரெண்டிங்கில் வர ஆரம்பித்திருக்கிறார். அதாவது, அவரது பழைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில், பேசிய தகவல் என்னவென்றால், ‘சினிமா தொழில் என்பதே விளையாட்டுதான். நான் இதுவரை […]

கால்நூற்றாண்டு கால சக்ஸஸ் ஃபார்முலா என்ன?: இயக்குனர் சுந்தர்.சி விளக்கம்

தமிழ்சினிமாவில், சுமார் 25 ஆண்டுகாலமாக வெற்றியுலா வருபவர் சுந்தர்.சி. இவர் சாதனையின் இலக்கணம் பற்றிப் பார்ப்போம்.. ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, ரஜினி நடிப்பில் அருணாச்சலம், கமல் நடிப்பில் அன்பே சிவம் போன்ற படங்களையும் இயக்கி கவனம் ஈர்த்தார். பின்னர், கிரி, வின்னர், தலைநகரம் என மாஸ் காமெடி படங்களையும் வடிவேலு கூட்டணியில் கொடுத்தவர் சுந்தர்.சி. தற்போது இவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு கலக்க வரும் படம் ‘கேங்கர்ஸ்’. இப்படம் வரும் 24-ந்தேதி ரிலீஸாகிறது. […]

கமலுடன் பதற்றமின்றி நடிக்க, சிம்பு கொடுத்த டிப்ஸ்: அசோக்செல்வன் சுவாரஸ்ய தகவல்

‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்த அசோக்செல்வன் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் ஆகியோர் இணைந்த ‘தக் லைஃப்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்ஸ், முதல் சிங்கிள் லான்ச் ஆகியவையும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், கமலுடன் முதல் முறையாக அசோக் செல்வனும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கமல் […]

அஜித் படமாக இருந்தால் என்ன; எங்கள் சொத்தை எப்படி நீ திருடலாம்?: கங்கை அமரன் ஆவேசம்

‘என் வீட்டுக்குள் அனுமதி இல்லாமல் எப்படி நீ வரலாம்’ என்ற கங்கை அமரனின் ஆவேசப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ‘காப்பி ரைட்ஸ்’ தொடர்பாக அவர் பேசியதாவது: ‘இசை மற்றும் பாடல்கள் குறித்த காப்பி ரைட்ஸ் விவகாரத்தில் உலக அளவில் என்ன விதி இருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். இந்திய விதியை நாங்கள் பின்பற்றவில்லை. கதை ஆசிரியருக்கு கதையில் உரிமை உண்டு, அந்தப் படம் எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், அவர்களுக்கு அதில் உரிமை உண்டு. ஆனால், […]

சிவாஜி வீடு ஜப்தி வழக்கில், கோர்ட் முக்கிய உத்தரவு: நடிகர் பிரபு மகிழ்ச்சி

சிவாஜியின் ‘அன்னை இல்லம்’ ஜப்தி வழக்கில், இன்று நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு காண்போம்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், இளைய மகன் பிரபு. இதில், ராம்குமாரின் மகன் துஷ்யந்த் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். பின்னர், சினிமா பட தயாரிப்பில் ஈடுபட்டார். அவர் தயாரித்த ‘ஜகஜால கில்லாடி’ படத்தை எழில் இயக்க, விஷ்ணு விஷால், சுமதி, யோகிபாபு, நிவேதா பெத்துராஜ், மொட்டை ராஜேந்திரன், ராதாரவி, நளினி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை […]

போதைப்பொருள் பயன்படுத்தினேன்: போலீஸில் வில்லன் நடிகர் ஒப்புதல்

ஜிகர்தண்டா பிளஸ், குட் பேட் அக்லி போன்ற படங்களில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போலீஸார் விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியதை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் தெரிவிக்கையில், போதைப் பொருளுக்கான பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி விடுவேன். இந்த விற்பனையாளர்களின் அடையாளங்கள், பரிவர்த்தனையான தேதிகள் எனக்கு நினைவில் இல்லை. மெத்தம்பேட்டமைனை முகர்ந்து பார்த்துள்ளேன். எப்போதாவது கஞ்சா புகைப்பேன். குறிப்பாக யாராவது படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்தால் புகைப்பேன்’ என கூறியுள்ளார். நாங்கள் […]

நடிகர் நெப்போலியன் மகனின் உடல்நிலை பற்றி தவறான தகவல்: போலீஸில் புகார்

நடிகர் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷுக்காக அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், தனுஷ்க்கு ஜப்பானில் மிக சிறப்பாக திருமணம் நடைபெற்றது. நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது நெப்போலியன் மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில் வதந்தி பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மயோபதி மருத்துவமனை மருத்துவர் திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ‘நான் முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் அவர்கள் நடத்தி வரும் ஜீவன் […]

விஜய் குறித்து ‘போய்வா நண்பா’ என பாடுகிறார் ‘குபேரா’ தனுஷ்?: வைரல் டுடே

தளபதி விஜய்யின் அரசியல் பயணம் தெரிந்ததே. இச்சூழலில், தற்போது ரிலீஸாகியுள்ள தனுஷின் பாடலை வாசிப்போம்.. தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘குபேரா’ தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘போய்வா போய்வா நண்பா.. ராஜாபோல கெத்தா போய்வா நண்பா..’ என்ற பாடலை வெளியிடப்பட்டு உள்ளது. […]

‘ரெட்ரோ’ காதல் கதையை எழுத யார் காரணம்?: கார்த்திக் சுப்பராஜ் விளக்கம்

வன்முறைச் சம்பவங்களை படமாக்கும் நிலையை மாற்றி, தற்போது காதல் கதையை எடுத்துள்ளார் ‘மெட்ரோ’ இயக்குனர். இதற்கான பின்னணி குறித்து பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ பட இசை-டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ‘ரெட்ரோ’ படம் ஆக்‌ஷன் கலந்த லவ் ஜானரில் […]