Browsing author

Suresh

மே 1-ந்தேதி ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி அரசு விடுமுறை என்பதால், அன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதலும் மோதலும் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். டூரிஸ்ட் […]

எலக்ட்ரோபதி எனும் மாமருந்து: திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் முரளி நடித்த ‘காமராசு’ படத்தையும் மற்றும் அய்யா வழி, நதிகள் நனைவதில்லை போன்ற படங்களையும் இயக்கியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். இவர் அதிமுக நட்சத்திரப் பேச்சாளராகவும் உள்ளார். மேலும் ‘நாஞ்சில் ஆர்கானிக்’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இந்நிறுவனம், மனிதகுலத்திற்கு மிகவும் இந்தியமையாத இயற்கையான உணவுகளை இயற்கையாகவே வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில், கடந்த 25-ந்தேதி எலக்ட்ரோபதி மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதனை காருண்யா மருத்துவக் […]

‘ரெட்ரோ’ தொடர்ந்து சூர்யா 46-வது படம் மற்றும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் அப்டேட்ஸ்

சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் தகவல்கள் காண்போம்… சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில், ‘காதலும் மோதலும் நிறைந்த கதை. படத்தில் சூர்யாவை நியு லுக்கில் காணலாம், ரசிப்பீர்கள்’ என்றார். அவ்வகையில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ […]

பயணிகள் விமானத்தில் ரஜினி திடீர் விசிட்: மகிழ்ச்சியில், பொதுமக்கள் ஆரவாரம்

‘நிலை உயரும்போது பணிவு வந்தால், உலகம் உன்னை வணங்கும்’ என்பது எடுத்துக்காட்டானவர் சூப்பர் ஸ்டார். அவ்வகையில், ஒரு பரபரப்பு நிகழ்வு காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘கூலி’ படத்தின் அவரது போர்ஷன் முடிவடைந்தது. தற்போது, நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்-2’ பட ஷூட் கோவை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தற்போதைய ஷூட் முடிந்து, தனி விமானத்தில் செல்லாமல் இயல்பாக அனைவரும் பயணிக்கும் விமானத்திற்குள் ரஜினி வந்ததை பார்த்த சக பயணிகள் தலைவா, தலைவா என […]

விஜய் கோவை வருகை: தவெக.வினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு; பரபரப்பு

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தை தொடந்து, தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில், விஜய், 2 நாள் பயணமாக கோவை வந்துள்ளார். பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்தார் கோவை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்தனர். இதனால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டது எனவும், விமான நிலைய வளாகத்திலிருந்த பொருட்களும் தவெக.வினரால் சேதப்படுத்தப்பட்டது எனவும் கூறப்படுகிறது. […]

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன், புரொபோஸ் செய்த நிகழ்வு; கண்கலங்கிய தோழி

புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர், மேடையிலிருந்தவாறு, தன் தோழியிடம் அளவு கடந்த காதலை சொல்லினார். இது பற்றிய காதல் சமாச்சாரம் பார்ப்போம்.. சசிகுமார் ‘கருடன்’ படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சிம்ரன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், பேசிக் கொண்டிருக்கும்போது, அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தனது தோழிக்கு நன்றி கூறினார். அப்போது […]

என் அப்பா பற்றி ரஜினி கூறிய விஷயம்: ஸ்ருதிஹாசன் வாய்ஸ், வைரல்

‘தனது அப்பாவை பற்றி ரஜினி கூறிய தகவல்கள்’ என ஸ்ருதி பெருமிதம் அடைந்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் அமீர்கான், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக அமீர்கான் இந்தப் படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதேபோல் சத்யராஜ் பல வருடங்கள் கழித்தும், கமலின் மகள் ஸ்ருதி முதன் முறையாகவும் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், […]

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

ரன்யா ராவ், தமிழில் ‘வாகா’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தவர். தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், டிஜிபி-யின் வளர்ப்பு மகள் ஆவார். இவரது இரு நண்பர்கள் மீதும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், ரன்யா ராவ், அவரது நண்பர்களான நடிகர் தருண் மற்றும் சாஹில் ஜெயின் ஆகியோர் ஒரு வருடம் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருக்க நேரிடும். கடந்த மார்ச் மாதம் துபாயிலிருந்து ரூ.12 கோடி மதிப்புள்ள 14.1 கிலோ […]

மத்திய அரசு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்: ரஜினிகாந்த் ஆவேசம்

‘கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது’ என ரஜினிகாந்த் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொடூரம் நாட்டையே அதிர்ச்சி அடையத் செய்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது இந்தியா. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். […]

ரோபோ சங்கரை தூக்கிவர ‘கேங்லீடர்’ ரமேஷ் கண்ணா உத்தரவு: இமான் அண்ணாச்சி சுவாரஸ்ய தகவல்

‘அம்பி’ படத்தில் ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள் பற்றி இமான் அண்ணாச்சி பகிர்ந்துள்ள தகவல்கள் காண்போம்.. தமிழ் திரையில் இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடிப்பில் ‘ஏதோ செய்தாய் என்னை’ மற்றும் மலையாளத் திரையில் பிரதீஷ் நடிப்பில் ‘ரூல் நம்பர்-4’ ஆகிய படங்களை இயக்கியவர் பாஸர் ஜே எல்வின். இவர், தற்போது ரோபோ சங்கர் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அம்பி’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படம், கோடை விடுமுறையை முன்னிட்டு மே […]