Browsing author

Suresh

தனுஷ்-அருண் விஜய் மோதும் ‘இட்லி கடை’ படத்தின் அப்டேட்ஸ்

‘இட்லி கடை’ திரைப்படம் குறித்து, தயாரிப்பு நிறுவனம் தற்போது புதிய தகவல் வெளியிட்டுள்ளது. இது பற்றிப் பார்ப்போம்.. பன்முகத்திறமை கொண்ட தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக, அருண் விஜய் மற்றும் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கான போர்ஷனை ஏற்கனவே தனுஷ் எடுத்து முடித்து விட்டார் என்றும், நித்யா மேனன் போர்ஷன் முழுக்க முழுக்க பிளாஷ்பேக் […]

பாடகர் அரிஜித் மற்றும் அனிருத் இசை நிகழ்ச்சிகள் ரத்து; ஒத்திவைப்பு

அனிருத் இசைநிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரபல பின்னணிப் பாடகர் அரிஜித் சிங் ஏப்ரல் 27-ந்தேதி நாளை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அரிஜித் சிங்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், டிக்கெட் வாங்கிய அனைவருக்கும் […]

சீதையாக நடிக்க முடியாமல் போனதற்கு யாஷ்தான் காரணம்: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆதங்கம்

இராமாயணம் படத்தில் சீதையாக நடிப்பதற்கு வந்த வாய்ப்பு (யாஷ் காரணமாக) நழுவியது என ஸ்ரீநிதி மறைமுகமாக தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஸ்ரீநிதி ஷெட்டி ‘கேஜிஎஃப் சேப்டர்-1’ படம் மூலம் கதாநாயகி ஆனார். இப்படத்தில் யாஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பிறகு ‘கேஜிஎஃப் சேப்டர் 2’ படத்தில் மீண்டும் இணைந்து நடித்தனர். இந்தப் படமும் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கோப்ரா’ படம் மூலமாக அறிமுகமானார். தற்போது, […]

காப்புரிமை விதிமீறல்: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு

காப்புரிமை சட்டப்படி, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் 2023-ல் வெளியானது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், […]

ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படக்குழு: கோலிவுட் வட்டாரம் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்.. இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால், தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். வசூல் சாதனையும் படைக்கிறது. இந்நிலையில், கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் […]

சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் ‘கேங்கர்ஸ்’ படம் எப்படி?: வைரல் நிகழ்வு

வடிவேலு வெளிப்படையாக பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்’ படம், இன்று வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. விளையாட்டு வாத்தியார்களாக இருவரும் காமெடியில் அசத்தியுள்ளனர். குறிப்பாக, முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நகைச்சுவை சரவெடியில் திரையரங்கம் அதிர்கிறது. அவ்வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு திருப்தி என சொல்லலாம். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு காம்போ கலக்கியுள்ளனர். வின்னர், கிரி, ரெண்டு, லண்டன் என இவர்களது […]

சந்தானம், சூரி நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

சிம்பு படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சந்தானம். இதைத்தொடர்ந்து சினிமாவில் முதல் முறை வாய்ப்பு கொடுத்தவர் சிம்பு. இது பற்றி சந்தானம், ‘என்றைக்கும் நான் சிம்புவை மறக்கமாட்டேன்’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். விழா நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் அளித்த பேட்டிகளிலும் சினிமா பயணம் குறித்து பேசும் சந்தானம், சிம்புவை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. வாய்ப்பு கொடுத்தது சிம்புவாக இருந்தாலும், […]

முதல்ல கார்த்தி படம், அப்புறம்தான் சிவகார்த்திகேயன்: லோகேஷுக்கு ஃபேன்ஸ் கோரிக்கை

‘கைதி-2’ படத்தை விரைவில் தொடங்கக் கூறி ரசிகர்கள் இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிப் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்திருப்பவர் லோகேஷ் கனகராஜ். திரில்லர் கதையை மையமாக வைத்து, ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்து விட்டார். பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் செம ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து மாஸ்டர், விக்ரம்- 2, லியோ என மாஸ் இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் […]

எனது மனமாற்றத்திற்கு டி.ராஜேந்தர் தான் காரணம்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு, வைரல்

டி.ராஜேந்தர் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவிக்கையில், ‘நான் பார்த்து இன்ஸ்பியர் ஆன மனிதர்களில் டி.ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்எஸ்வி, மகாதேவன் என பலரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால், டிஆர் சார் கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான், எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு […]

மத்திய அரசிடம் கைகூப்பி வேண்டி, நடிகர் அனுபம் கெர் அவசர பதிவு

பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் மத்திய அரசுக்கு வேண்டுதலாக, வீடியோ பதிவு ஒன்று போட்டுள்ளார். இது பற்றிக் காண்போம். ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘பகல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டுக் கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள் மீது கடும் கோபமும் உள்ளது. […]