Browsing author

Suresh

நார்மல் செக்அப்தான்; அஜித் மருத்துவமனையில் அனுமதி..

அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தல’ அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனிடையே அஜித்துக்கு, கடந்த ஜனவரியில், பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 28-ந் தேதி மாலை டெல்லியில் நடைபெற்ற விழாவில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இதற்காக குடும்பத்துடன் டெல்லிக்கு சென்றிருந்த அஜித்குமார் நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அஜித்துக்கு உற்சாக வரவேற்பு […]

உங்கள் ஆதரவு இல்லாமல், நான் இருக்க முடியாது : நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி..

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படம் குறித்து சிம்ரன் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து, அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘டூரிஸ் ஃபேமிலி’. இப்படத்தில் யோகிபாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரைப் போலவே டிரெய்லரும் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் கதைக்களமாக, இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு தப்பித்து வரும் […]

‘ரிஸ்க்’ எடுத்தால் முன்னேறலாம்: நடிகை சமந்தா பேச்சு, வைரல்..

பாலிவுட்டில் நடிகை சமந்தா கடைசியாக வருண் தவானோடு ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் சீரிஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில், வாழ்க்கை-தன்னம்பிக்கை-ரிஸ்க்-மாற றம் என்றெல்லாம் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம். ‘ரிஸ்க் எடுக்காமல் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேற வேண்டும் என்றால், கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்கக் கூடாது. புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும். பயத்தை விட்டு விட்டு தைரியமாக சவால்களை […]

சூர்யாவின் ‘சிக்ஸ் பேக்’ பற்றி சிவகுமார் சர்ச்சை பேச்சு: திரை வட்டார பரபரப்பு..

சிக்ஸ் பேக் பற்றி சூர்யா பெரிய விஷயமாக பேசியதில்லை. ஆனால், சிவகுமார் பேசியதுதான் தர்க்கமாகி விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘ரெட்ரோ’ பட இசை வெளியீட்டு விழாவில், சிவகுமார் பேசியது சர்ச்சையாகி விட்டது. அதாவது ‘தமிழ் சினிமாவில், தன் மகன் சூர்யாவுக்கு முன்பும், பின்பும் சிக்ஸ் பேக் வைத்தவர் யாரும் இல்லை’ என்றார். இதையடுத்து, ஆளாளுக்கு ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். சூர்யாவுக்கு முன்பே சிக்ஸ் பேக் வைத்தார் அர்ஜுன், தனுஷ் என அவர்களின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். […]

‘ரெட்ரோ’ படத்துக்கு போட்டியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸா?: தயாரிப்பாளர் விளக்கம்..

‘ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி தீர்மானிக்கிறது’ என்கிறார் தயாரிப்பாளர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதே நாளில் பான் இந்தியா அளவில் நானி நடித்துள்ள ‘ஹிட்’ படமும் வெளியாகிறது. இந்நிலையில், ஃபீல் குட் மூவியாக சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் ரிலீஸாகிறது. இது குறித்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தெரிவிக்கையில், ‘சூர்யா சார் […]

இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது: அஜித் பிரார்த்தனை..

பகல்காம் பயங்கரவாதம் குறித்து, அஜித்குமார் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. பகல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு திரைப் பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், டெல்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிய அஜித் குமார் தெரிவிக்கையில், ‘இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது. மக்கள் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கல்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன். அரசாங்கம், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று நான் […]

கல்யாணம் ஆகாமலே தாயானவரா நடிகை ஸ்ரீலீலா?

பேரன்பும் பெருங்கருணையுமாய் காட்சியளிக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ஸ்ரீலீலா. இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது. வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. பாலிவுட்டில் ஸ்ரீலீலா அனுராக் பாசுவின் பெயரிடப்படாத காதல் த்ரில்லர் படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் […]

வெங்கி அட்லுரிக்கு கால்சீட் தந்த சூர்யா, வெற்றிமாறனுக்கு தர மாட்டாரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் வெங்கி அட்லுரி என்றால், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் என்ன ஆயிற்று? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘ரெட்ரோ’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார்…’ வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கிறேன். நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படுகிறது’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ரசிகர்களுக்கு அறிவுறுத்தலாக அவர் தெரிவிக்கையில், ‘நான் படத்திற்காக மட்டுமே சிகரெட் புகைக்கிறேன். தயவு செய்து யாரும் அதை சரி […]

எனது பெயரை அவமானமாக பார்க்கிறார்கள்: வடிவேலு ஆதங்கம்..

‘சிரிக்க வைத்தாலும், எனது பெயர் சிலருக்கு அவமானமாகவே தெரிகிறது’ என ஆதங்கமாய் தெரிவித்துள்ளார் வடிவேலு. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘நகைச்சுவைப் புயல்’ வடிவேலு நடிப்பில், சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இவர்களது கூட்டணியில் 14 ஆண்டுகளுக்கு மாஸ் காட்டியுள்ளது. இதனால், தொடர்ந்து வடிவேலுவும், சுந்தரும் இணைந்து படம் செய்ய வேண்டும் என திரை ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில், இது பற்றி வடிவேலு தெரிவித்துள்ள தகவல் தற்போது டிரெண்ட் […]

பகல்காம் தாக்குதல்: தவறாகப் புரிந்து கொண்டவர்களுக்கு, விஜய் ஆண்டனி மீண்டும் அறிக்கை

‘தனது பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என விஜய் ஆண்டனி மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. காஷ்மீர், பகல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பகல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் […]