Browsing author

Suresh

என் தாயும் மறைவும், தங்கையின் ஆறுதலும்: ஜான்வி கபூர் பேச்சு, வைரல்..

இன்று அன்னையர் தினம். இதனை முன்னிட்டு, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் நெகிழ்ச்சியான பேச்சு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீதேவியின் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் தனக்குள் ஏற்பட்ட வெறுமையை விவரித்த ஜான்வி, ‘என்ன நடக்கிறது, இனி என்ன செய்வது என்ற குழப்பத்தில் நான் இருந்தேன். ஆனால், என் தங்கை குஷி, என்னைவிட இளையவளாக இருந்தும், என்னைத் தேற்றுவதற்காகத் தானே அழாமல் இருந்தாள். அவள் என்னைவிட மிகவும் துணிச்சலாகவும், […]

சூர்யா-கார்த்தி நடித்த படங்களுடன் பிரதீப் நடித்த ‘டூட்’ படம் ரிலீஸ்?

பிரதீப் நடித்து வெளியாகும் ‘டூட்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் நடித்துள்ள ‘எல்ஐகே’ படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டூட் (Dude) படம் தீபாவளிக்கு வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஏற்கனவே ‘குட் பேட் அக்லி’ படம் வெளியானது. இந்நிலையில், இந்த ஆண்டு ‘டூட்’ படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிடுகிறது. ‘கோமாளி’ படத்தை இயக்கி ரவி மோகனுக்கு ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்து தனது இயக்கத்தில் […]

‘ஜெயிலர்2’ படத்தில் மோகன்லாலை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கிறாரா?

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது. தற்போது ஜெயிலர் படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார் அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தைப் போலவே அதிரடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன்லாலின் மாத்யூ என்ற டான் கதாபாத்திரம் ஜெயிலர்2 படத்தில் இடம் பெறுகிறது. இதற்காக, […]

‘ஆபரேஷன் சிந்தூர்’ திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..

‘ஆபரேஷன் சிந்தூர்’ படத்தின் தகவல்கள் காண்போம்.. பாலிவுட்டில், நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ், தி கன்டென்ட் இன்ஜினியருடன் இணைந்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற புதிய படத்தை அறிவித்துள்ளது. பகல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் பதிலடியை இந்தப் படம் மையமாகக் கொண்டுள்ளது. சிந்தூர் என்ற பெயர் குறியீட்டில் நிறைந்துள்ளது. பாரம்பரியமாக இந்து கலாச்சாரத்தில் பயன்படுத்தப்படும் சிந்தூர் (குங்குமம்), திருமணம் மற்றும் தற்காப்பு மன உறுதியை பிரதிபலிக்கிறது. இது பெரும்பாலும் திருமணமான பெண்களால் நெற்றியில் அணியப்படுகிறது. மேலும் […]

ஜி.வி.பிரகாஷ்-கயாடு லோஹர் நடித்த ‘இம்மார்ட்டல்’ படம் வெளியீடு..

‘இம்மார்ட்டல்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையாளராக கலக்கி வருகிறார் ஜி்.வி.பிரகாஷ் குமார். கடைசியாக இவரது நடிப்பில் ‘கிங்ஸ்டன்’ என்ற படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார். இந்நிலையில் ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்திருந்த கயாடு லோஹர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது சிம்பு நடிக்கும் STR45 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் ‘இம்மார்ட்டல்’ […]

சசிகுமார் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வெற்றியை தொடர்ந்து, ‘ஃப்ரீடம்’ படம் ரிலீஸ்..

‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்பது போல சசிகுமார் நடித்து வெளியாகும் அடுத்த படத்தின் தகவல்கள் காண்போம்.. சசிகுமார்-சிம்ரன் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை அபிஷன் இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சசிகுமார் நாயகனாக நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ படம் ஜூலை 10-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால், சசிகுமார் நடிப்பில் வெளியாகாமல் இருக்கும் சில படங்கள் வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டு வருகின்றன. […]

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவரும் நண்பர்களா? காதலர்களா?

நண்பர்கள் காதலர்களாக இணைவது இயல்பு தானே. அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு காண்போம்.. விஜய் தேவரகொண்டாவின் 36-வது பிறந்த நாளான மே 9-ந்தேதி அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க ராஷ்மிகா மந்தனா ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவில், அவர் விஜய்யை எந்தப் பெயரால் அழைக்கிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகா தனது இன்ஸ்டாவில், ‘எனக்கு மீண்டும் மிகவும் தாமதமாகி விட்டது. ஆனால், பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜ்ஜு. உங்கள் நாள் அனைத்து வகையான ஆசீர்வாதங்கள், அன்பு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், […]

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்றது ஜெயிலர் திரைப்படம். இப்படத்தில், ரஜினி முத்துவேல் பாண்டியன் என்கிற மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம், உலகளவில் 650 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கியது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காடு அட்டப்பாடியில் நடைபெற்றது. அங்கு ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தில், ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, பகத் […]

பணத்தை இழந்த ஏழை பெண்ணுக்கு, ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் உதவி..

மனிதநேயத்துடன் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவர் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி சேர்த்து வைத்துள்ளார். இப்படி சேர்த்த ரூ.1 லட்சம் பணத்தை தகர உண்டியலில் சேர்த்து மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார். மகளுக்கு காதணி விழா நடத்த உண்டியலை எடுத்தபோது, கரையான் அரித்துவிட்டது. அவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து […]

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் அப்டேட்ஸ்..

சூர்யா45′ படத்தின் தகவல்கள் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ படம் ரசிகர்களை திருப்தி செய்த படமாக அமைந்துள்ளது. இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகின்றது. இந்நிலையில், ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45-வது படத்தில் நடித்து வருகின்றார். ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தில் சூர்யா வக்கீலாக நடிப்பதாகவும்,. இப்படத்திற்கு ‘வேட்டைக்கருப்பு’ என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தாண்டு தீபாவளி […]