Browsing author

Suresh

தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் ஓடிடி.யில் விற்பனை: எவ்வளவு தெரியுமா?

‘குபேரா’ படத்தின் டிஜிட்டல் உரிமை பற்றிப் பார்ப்போம்.. தனுஷ்-ராஷ்மிகா நடிப்பில் சேகர் கம்முலா இயக்கியுள்ள ‘குபேரா’ படத்தின் டிஜிட்டல் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி நிறுவனம் வாங்கி உள்ளது. ரூ.50 கோடி கொடுத்து குபேரா பட ஓடிடி உரிமையை அந்நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய ஓடிடி ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திரையரங்குகளில் படம் ஓடி முடிந்த பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியில் குபேரா திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படும். தமிழ், தெலுங்கு, இந்தி, […]

‘தக் லைஃப்’ டிரெய்லரில் கமல்-அபிராமி முத்தக்காட்சி: பரபரக்கும் விவாதங்கள்..

யுத்தம் என்பதற்கும் முத்தம் என்பதற்கும் ஒரு எழுத்துதான்ங்க வித்தியாசம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியில் கமல்ஹாசன் தன்னைவிட 30 வயது இளைய நடிகை அபிராமி உடன் நெருக்கமான காட்சியில் நடித்திருப்பது சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அதிரடிக் காட்சிகள், கமல்ஹாசனின் வித்தியாசமான தோற்றங்கள் மற்றும் பிற காட்சிகள் கவனத்தை […]

உடல் எடையைவிட, மன ஆரோக்கியமே முக்கியம்: விஜய் சேதுபதி உத்வேக பேச்சு..

விஜய் சேதுபதி தற்போது சற்று ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். தனது எடை குறித்த சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டார். இது குறித்துப் பார்ப்போம்.. மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியின் உடல் எடை குறைப்பு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘எடை பார்க்கும் எந்திரத்தை நான் தொடுவதே இல்லை. ஏனென்றால், அதில் உள்ள எண்கள் என்னை மிகவும் சோர்வடையச் செய்யும்’ என நகைச்சுவையாக கூறினார். மேலும், ‘எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதை விட, நான் […]

மதுரை மக்கள் ரெண்டு விஷயத்துல மாறவே மாட்டாங்க: விஷால் ஓபன் டாக்..

மதுரை என்றாலே மல்லிகைப் பூ வாசமும் வரும். பாசமும் பந்தி வைக்கும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விஷால் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ‘செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகாமல் எப்படி ஊருக்கு போக முடியும். எங்க அம்மா வீட்டுக்குள் சேர்க்க மாட்டாங்க. எங்கம்மா புடவை கொடுத்தாங்க அம்மனுக்கு கொடுத்து சாமி தரிசனம் செய்தேன். […]

இரண்டு விஷயங்களை நான் செய்யவே மாட்டேன்: சுஹாசினி ‘வைரல்’ வாய்ஸ்..

மணி சார் குறித்து சுஹாசினி தெரிவித்த தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடித்த ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது டிரெய்லரும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மணிரத்னம் குறித்து சுஹாசினி அரிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் தெரிவிக்கையில், ‘மணிரத்னத்துக்கும் எனக்கும் சரியான புரிதல் இருப்பது இசையில்தான். எங்களை இசைதான் இணைக்கும். ஏதேனும் ஒரு கூட்டத்தில் இருக்கும்போது, எனக்கு பிடித்த பாடல் ஒலிபரப்பப்பட்டால் என்னை தேடி பிடித்து […]

தனுஷ் என்னை கலாய்க்கவே இல்லை: நடிகை வித்யுலேகா கூறிய ஃப்ளாஷ்பேக்..

‘குண்டான உடல்வாகுடன் இருந்தாலும் தனுஷ் என்னை கலாய்க்கவில்லை’ என நினைவுகூர்ந்துள்ளார் வித்யுலேகா. இது குறித்த சுவாரஸ்யம் பார்ப்போம்.. நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் நடிகையானவர். நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். தெலுங்கு படங்களில் அதிகம் பிஸியாக இருக்கும் இவர், தன் எடையை 12 கிலோ குறைத்துவிட்டார். தொழில் அதிபர் சஞ்சய்யை திருமணம் செய்து கொண்ட பிறகும், நடிப்பை தொடர்கிறார். இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது. […]

அஜித் அண்ணா, செம ஜாலியாக பேட்டி கொடுத்தார்: வைரலாகும் சந்தானம் நினைவலைகள்..

பொதுவாக அஜித் பேட்டி கொடுப்பதில்லை. ஆனால், அவரே விரும்பி ஒரு பேட்டி கொடுத்துள்ளார். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘தல’ அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மேலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்தை தனுஷ் இயக்குவதற்கு வாய்ப்புகள் இல்லை என்பதுதான் பெரும்பாலான கணிப்பாக இருக்கிறது. இதற்கிடையே அஜித்குமார் ஊடகங்களை சந்தித்து பேட்டி கொடுப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதற்கு காரணங்களாக பல்வேறு விஷயங்கள் சொல்லப்படுகிறது. இச்சூழலில், […]

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார் தெரியுமா?: வைரலாகும் தகவல்

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்? என்பது பற்றிய தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினி கேரளாவில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு பணிகளில் இயக்குனர் நெல்சன் ஈடுபட்டுள்ளார். இந்த இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ வெளியாகவுள்ளது. ‘ஜெயிலர் 2’ முடித்துவிட்டு ரஜினியின் அடுத்த படம் என்ன […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன், சிரஞ்சீவி-நயன்தாரா நடித்த படம் மோதல்

தமிழ், மலையாளம் என பிஸியான நயன் தற்போது தெலுங்கிலும் தடம் பதிக்க தொடங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. 40 வயதாகியும் இன்றும் ஹீரோயினியாக ரவுண்ட் கட்டும் நயன்தாரா, தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய படத்தின் அறிவிப்பை மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார். படக்குழுவுடன் இணைந்து நயன் வெளியிட்டுள்ள வீடியோவில், நயன் செம கூலாக தெலுங்கு பேசுகிறார். சிரஞ்சீவியின் 157-வது படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை அனில் ரவிபிடி இயக்குகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு […]

பிரபல சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாத்துறை சோதனை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், சினிமா துறையில் தனது பயணத்தை உதவி இயக்குனராக தொடங்கியவர். தனுஷ் தயாரித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் சிவனுக்கு உதவியாளராக பணியாற்றியதில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. பின்னர், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘பாவ கதைகள்’, ‘அமரன்’ போன்ற படங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றினார். தற்போது ‘டான் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் […]