Browsing author

Suresh

96 படத்தின் 2-ம் பாகம் குறித்து இயக்குனர் பிரேம்குமார் முக்கிய அறிவிப்பு..

96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல்கள் காண்போம்.. விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. தற்போது ’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் […]

‘அவருடன்’ இணைந்து நடிக்க ஆசை: திரிஷா குறிப்பிடும் நடிகர் யார் தெரியுமா?

முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ள திரிஷா, தற்போது தனது விருப்பம் ஒன்றை தெரிவித்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா. இப்படம், ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. இது தவிர தெலுங்கில் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்துவருகிறார். முன்னதாக, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருந்தார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் ஆகியோருடன் மூன்றாவது முறையாக ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார் படத்தின் டிரெய்லரிலும் […]

கன்னித்தன்மையை எதிர்பார்க்காதீர்கள்: பிரியங்கா சோப்ரா பேச்சுக்கு வலுக்கிறது எதிர்ப்பு..

நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள கருத்து விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவர் தெரிவிக்கையில், ‘நீங்கள் திருமணம் செய்யும் பெண்கள் கன்னியா என்று பார்க்க வேண்டாம். திருமணம் செய்ய கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. ‘கன்னித்தன்மை’ என்பது ஒரு இரவு விஷயம். எனவே, தங்களுக்கு கன்னிப் பெண்ணே வேண்டும் என்று சொல்வது சரியல்ல. அதற்குப் பதிலாக நல்ல நடத்தை மட்டுமே வாழ்க்கைக்குத் தேவை’ என கூறியுள்ளார். இதனால், பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகப் பலர் கண்டனம் தெரிவித்து […]

நடிகை ஜான்வி கபூர் லைக் செய்த வீடியோ: வைரலாகும் சர்ச்சை..

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் ஒரு வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அது தற்போது பேசுபொருளாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவி மற்றும் மாதுரி தீட்சித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வெளியான வீடியோவை ஜான்வி கபூர் லைக் செய்து இருப்பதற்கு ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். அந்த வீடியோவில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறத்தில் ‘பீட்டா’ திரைப்படத்தில் வரும் மாதிரி தீட்சித்தின் பிரபல நடனக் காட்சியான “தக் தக் கர்னே லகா..” பாடல் ஒளிபரப்பாகிறது. அதற்கு கீழே, “இது […]

இப்படியெல்லாம் பண்ணாதீங்க: ‘ஜனநாயகன்’ படக்குழுவினரிடம் விஜய்

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ ஷுட் விரைவில் நிறைவடைகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. 1992-ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். பின்னர், விகரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படத்தில் தனித்த முத்திரை பதித்தார். தற்போது ‘ஜன நாயகன்’ என் கடைசிப் படம் என அறிவித்து, தமிழக வெற்றிக் கழகம் கட்சியையும் தொடங்கி, மிகப்பெரிய மாநாட்டையும் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளார். எச். வினோத் […]

மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான். இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு மழை பொழிந்தவர். இதில், பார்த்திபன் உடன் இணைந்து கலக்கிய நகைச்சுவை பேர் பெற்றது. தற்போதும் பேசப்படுகிறது. இந்நிலையில், பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், ‘நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் […]

வருகிற ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் உடல் நல்லடக்கம்

வருகிற 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக திரையுலகுக்கு வந்தவர் ராஜேஷ். சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். […]

கமல்ஹாசன் மீது காவல்நிலையத்தில் புகார்

சர்ச்சைப் பேச்சு தொடர்பாக, கமல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் புரமோஷன் பணிகள் களை கட்டியுள்ளது. அவ்வகையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ பட இசை வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், ‘தான் கமலின் எவ்வளவு பெரிய ரசிகன்’ என்பதை […]

விஜய்யின் இரண்டு திரைப்படங்கள் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

ரீ ரிலீஸாகவிருக்கும் விஜய்யின் படங்கள் பற்றிப் பார்ப்போம்.. விஜய்யின் அரசியல் பேசும் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளில் ஹெச். வினோத் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’ கடந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த முதல் படம் என்கிற சாதனையை தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும், இந்திய […]

திரைப் பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் கலப்பு: மணிரத்னம் தெளிவுரை

‘எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும்’ என விளக்கம் அளித்துள்ளார் மணிரத்னம். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘தமிழ் சினிமாவில் தற்போது பாடல்களும், அதில் உள்ள வரிகளும் பலருக்கும் புரிவதில்லை. வலைதளங்களில் சில நாட்கள் டிரெண்டாவதோடு சரி. நிலைத்து நிற்பதில்லை. மேலும், ஆங்கிலம் போன்ற பல மொழிகளின் கலப்புகளும் பாடல்களின் அழகையே கெடுத்து விடுகின்றன’ என்ற கருத்துகள் பெருகி வருகின்றன. இதுகுறித்து, இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘தற்போது தமிழ்ப் பாடல்களில் தமிழைக் கேட்க முடிவதில்லை. முந்தைய காலத்தில் தமிழில் […]