Browsing author

Suresh

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு, விஜய் சேதுபதி விளக்கம்..

ரம்யா மோகன் என்ற பயனர் எக்ஸ் தளத்தில், விஜய் சேதுபதி, தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணை பல ஆண்டுகளாகச் சுரண்டியதாகவும், அந்தப் பெண் இன்னும் வாழ்க்கையில் மீண்டு வர முயற்சி செய்து வருவதாகவும் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பின்னர் நீக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு பெரும் செய்தியானதைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தனது விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மேலும், இந்தக் குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தனது வழக்கறிஞர் இதை சைபர் கிரைம் பிரிவில் புகார் […]

பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படம்..

பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியாகியுள்ள ‘தலைவன் தலைவி’. படம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பங்குத் தொகை ரூ.25 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது. ‘தலைவன் தலைவி’ படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது அவரது இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை, லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க அட்வான்ஸ் தொகை […]

நட்டி நட்ராஜ் நடிக்கும் ‘நீலி’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் அப்டேட்ஸ்..

வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படத்துக்கு ‘நீலி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். 2400 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்தி உருவாகும் இபடத்தை உதயா கிரியேஷன்ஸ் சார்பில், மனோ உதயகுமார் தயாரிக்கிறார். நட்டி என்ற நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘நீங்காத எண்ணம்’, ‘மேல்நாட்டு மருமகன்’ ஆகிய படங்களை இயக்கிய எம்எஸ்எஸ் இயக்குகிறார். இப்படம் அவர் கூறும்போது, ‘அமானுஷ்ய படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். இது வரலாற்றுப் பின்னணியில் உருவாக இருப்பது […]

புதுமுகங்கள் நடித்த ‘சையாரா’ படம் 400 கோடி வசூல் சாதனை: தயாரிப்பாளர்கள் உற்சாகம்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள படம், ‘சையாரா’. காதலை கதைக்களமாக கொண்டு வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.177 கோடி வசூலித்த இப்படம், 12 நாட்களில் ரூ.266 கோடி வசூலித்துள்ளது. இந்த வார […]

3 வருடங்கள் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன்: இயக்குநர் பாண்டிராஜ் உருக்கம்..

கடைக்குட்டி சிங்கம், நம்ப வீட்டுப் பிள்ளை என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் பாண்டிராஜ், சூர்யாவை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். முன்னதாக, சூர்யாவின் தயாரிப்பில் ‘பசங்க-2’ மற்றும் ‘கடைக்குட்டி சிங்கம்’ என இரு படங்களை இயக்கியிருந்தார். இதில் ‘பசங்க-2’ படத்தில் சூர்யாவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, தன்னை வைத்து படமெடுக்கும் வாய்ப்பினை பாண்டிராஜிற்கு தந்தார் சூர்யா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா-பாண்டிராஜ் கூட்டணியில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ படம் பெரிய ஹைப்பில் வெளியானது. ஆனால், […]

நடிகை சமந்தாவுக்கு, விரைவில் 2-வது திருமணம்?

நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று பிரிந்த நடிகை சமந்தா, தொடர்ந்து மும்பையிலேயே வலம் வருகிறார். சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் இரவு மும்பையில் ஒரு ஆடம்பர உணவகத்திற்கு டின்னர் டேட்டிங்கிற்காக சென்றிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையில், ராஜின் முன்னாள் மனைவி ஷ்யாமலி தே தனது வலைத்தளத்தில் தெரிவிக்கையில், ‘நீங்கள் விதைத்ததுதான் அறுவடை செய்வீர்கள்’ என மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இது தற்போதுள்ள சூழ்நிலையை குறிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘தி ஃபேமிலி மேன் […]

தன் மீதான கடும் விமர்சனத்திற்கு, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதில்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனித்த முத்திரை பதித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது இவரது இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. முன்னதாக, முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சிக்கந்தர்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால், இப்படக் குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே, தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது என்பது ‘மாற்றுத்திறனாளிக்கு சமம்’ என தெரிவித்துள்ளார் முருகதாஸ். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய […]

அமெரிக்காவில் ‘மாஸ்’ காட்டும் ரஜினியின் ‘கூலி’ திரைப்படம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பது தெரிந்ததே. இப்படத்தில், தேவா என்ற நெகட்டிவ் ரோலில் ரஜினி கேங்ஸ்டராக வருகிறார். ஆக்சன் அதிரடியாய் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘கூலி’ படம் ரூ.1000 கோடி வசூல் செய்யுமா இல்லை, அதையும் தாண்டி வசூலிக்குமா எனவும் பேசப்படுகிறது. ரூ. 1000 கோடி வசூலை மனதில் வைத்துப் படம் எடுக்கவில்லை என்கிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் ரூ. 1000 கோடி […]

அனிருத்தை கடத்தப் போகிறேன்: விஜய் தேவரகொண்டா சுவாரஸ்ய தகவல்..

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் இறுதிகட்டப் பணிகள் இருந்ததால், விஜய் தேவரகொண்டா மட்டுமே கலந்து கொண்டார். இதில் அவர் பேசும்போது, ‘என் பயணத்தில் தொடர்ந்து அன்பும் ஆதரவும் தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. இன்று என் வாழ்நாளில் சிறப்பான நாளாகும். ‘கிங்டம்’ படம் நாளை ஜூலை 31-ந்தேதி வெளியாகிறது என்பதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். இயக்குநர் கவுதம் தின்னனூரி கதையை சொன்னபோது, அவர் ‘ஜெர்சி’ திரைப்படம் தமிழ்நாட்டில் பெற்ற […]

அமீர்கானின் புதிய முயற்சி: ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் யூ-டியூப்பில் ரிலீஸ்..

அமீர்கான், ஜெனிலியா நடிப்பில் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. அமீர்கான் தயாரித்து வெளியிட்ட இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தை யூ-டியூப் தளத்தில் அமீர்கான் வெளியிடவுள்ளார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், இப்படத்தை பார்க்க முடியும். இந்த புதிய முயற்சி, உலகளாவிய அளவில் திரைப்பட விநியோகத்தில் ஒரு புதிய வழிகாட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை […]