Browsing author

Suresh

36 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின் 171-வது படமான கூலி-யில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர், அமீர்கான் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. […]

விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாரா?: இயக்குநர் லோகேஷ் ஆர்வம்..

மாஸ்டர்-2, லியோ-2 படங்கள் உருவாகும் வாய்ப்புண்டா? என காண்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ படங்களில் இடம்பெறுகிறது. தற்போது ‘மாஸ்டர் 2’ மற்றும் ‘லியோ 2’ குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதில் ‘மாஸ்டர் 2’ படத்தின் ஐடியாவை விஜய் சாரிடம் கூறினேன். அப்படம் ரொம்பவே ஜாலியாக இருக்கும். ஏனென்றால், ஜே.டி கதாபாத்திரம் […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ பட அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படத்தில் நாயகி ருக்மிணியுடன் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இணையாத சிவகார்த்திகேயன் -ருக்மிணி வசந்த் முதல் முறையாக ‘மதராஸி’ மூலம் இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்த ஜோடி ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என்பதையும் தாண்டி அனைவருக்கும் பிடித்தமான ஜோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மிணி தமிழில் அறிமுகமான ACE திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அப்படத்தின் மூலம் ருக்மிணி வசந்த் தமிழ் ரசிகர்கள் […]

‘கூலி’ பட மோனிகா பாடலில் ரஜினி வராததற்கு காரணம்: லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இதில் சவுபின் சாகிரின் நடனம் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இப்பாடல் உருவான விதம் குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘மோனிகா பாடல் வியாபார நோக்கத்திற்காக வைக்கப்பட்டது தான். என் படங்களில் அப்படியான பாடல்கள் இடம்பெறாது. முழுமையாக த்ரில்லர் பாணியில் படம் இருக்கும்போது, கதையில் ஒரு சின்ன ரிலாக்ஸ் தேவைப்பட்டது. படமாக […]

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் கலெக்‌ஷன் விவரம்..

‘கிங்டம்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விமர்சனங்கள் சற்று கலவையாக வந்தாலும், விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.31 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டாவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் என்கிற சாதனையையும் கிங்டம் படைத்துள்ளது. அடுத்த மூன்று நாட்களில் கிங்டம் […]

தனுஷ் செய்த செயல், பொறுப்பற்றது: பிரபல இயக்குநர் அதிருப்தி..

பாலிவுட் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் இந்தி திரையில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் தற்போது ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது. இப்படத்தினை அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் வெளியிட்டு இருக்கிறது. இதற்காக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை ஏஐ தொழில்நுட்ப உதவியுடம் மாற்றியமைத்திருக்கிறது. இது இயக்குநர் ஆனந்த்.எல்.ராயை […]

லோகேஷ் கனகராஜ் ஒரு குழந்தை மாதிரி: அனிருத் சுவாரஸ்ய தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் தெரிவிக்கையில், ‘லோகேஷ் கனகராஜுக்கு பிடித்த கதைக்களம் கேங்ஸ்டர் டிராமா. அவர் அதில் ஊறிவிட்டார். நிஜவாழ்க்கையில் அவர் ஒரு குழந்தை. இவரா இந்தப் படத்தை எடுத்தார் என்பது மாதிரி தெரியும். இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரது கதையில் தலைவர் ரஜினி இருந்தால் […]

அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு, கேபிஒய் பாலா நிதியுதவி: உருக்கமான நிகழ்வு..

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்தவர் அபிநய் . அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த நிலையில், நலமுடன் இருந்த அபிநய்யின் வாழ்க்கை மாறிப்போனது. பட வாய்ப்புகள் கைநழுவி போனதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். கடந்த சில மாதங்களுக்கு முன், இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்களும் வீடியோவும் […]

ரஜினி எழுதும் சுயசரிதை பற்றி, இயக்குநர் லோகேஷ் விழிப்புணர்வு தகவல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பின் நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தன் சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என லோகேஷ் தெரிவித்தார். மேலும் அவ்வப்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கின்றேன் என லோகேஷிடம் ரஜினி தெரிவிக்கின்றார். இது குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. ‘ரஜினி சார் சொல்லும் விஷயங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். அவர் சொல்லிய விஷயங்களில் இருந்து மிக முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், கண்டிப்பாக ரஜினியின் சுயசரிதையை […]

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் வெளியான ‘விக்ரம் வேதா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆயினும் இப்படத்துக்கு பிறகு, புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர்-காயத்ரி இணை முடிவு செய்திருக்கிறது. இதற்காக கதை, திரைக்கதை ஆகியவை இறுதி செய்யப்பட்டுவிட்டன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார். படத்தின் முதற்கட்டப் பணிகளை தொடங்கிவிட்டன. படப்பிடிப்பிற்கான இடங்கள் தேர்வு, மற்ற நடிகர்கள் தேர்வு ஆகியவை […]