Browsing author

Suresh Kandasamy

அல்லு அர்ஜுனின் புதிய மைல்கல் சாதனை!

தேசிய விருது பெற்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் மதிப்புமிக்க ‘ஷோஸ்டாப்பர்ஸ் 2026’ சிறப்புப் பதிப்பின் அட்டைப்பட நட்சத்திரமாக இடம்பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அவரது திரைப்பயணத்தில், இந்த அங்கீகாரம் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தனித்துவமான திரை ஆளுமை, பான் இந்தியா ரசிகர்கள் மற்றும் சர்வதேச அளவிலான அங்கீகாரம் என அல்லு அர்ஜுன், பிராந்திய சினிமாவின் எல்லைகளை கடந்து இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தெலுங்கு திரையுலகில் […]

திருமணத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்த நடிகை மஞ்சிமா மோகன்

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘FIR’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’, ‘சுழல் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன். திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் மஞ்சிமா மோகன், தற்போது தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றியுள்ளார். உடல் எடையை கணிசமாகக் குறைத்து, ஸ்லிம்மாகவும் ஃபிட்டாகவும் மாறியுள்ள அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. […]

நாகார்ஜுனாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ் வெளியீடு

‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் ர.கார்த்திக், தற்போது தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமான ‘கிங் 100 – KING 100’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘உதயம்’, ‘இதயத்தை திருடாதே’, ‘தோழா’, ‘குபேரா’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் பிரபலமான பான் இந்திய நடிகர் […]

மீசைய முறுக்கு 2 படத்தின் 5வது சிங்கிள் ‘கலைவாணியே’ வெளியானது!

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி வரிகள் எழுதியுள்ளார். காதல், […]

ஹிருது ஹாருணின் “டெக்ஸாஸ் டைகர்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரமான திரையிருப்பு, உற்சாகமான நடனம் மற்றும் எனர்ஜி நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் […]

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் கருணாஸ்

தமிழ் திரையுலகில் நடிகர் கருணாஸ் தனது 25 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்யும் நிலையில், அவர் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் கருணாஸுக்கு, ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இதுகுறித்து நடிகர் கருணாஸ் கூறுகையில், “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில் […]