Browsing author

Suresh Kandasamy

முதலமைச்சர் விஜய்யை சந்தித்த அதர்வா, கவின்… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பதிவு!

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் கவின் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சமீப காலமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் முதலமைச்சரைச் சந்தித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பும் கவனம் பெற்றுள்ளது. நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள ‘இதயம் முரளி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் வெளியீட்டுக்கு முன்பாக முதலமைச்சர் விஜய்யை சந்தித்து அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றார். இதுகுறித்து தனது எக்ஸ் […]

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் பல மொழிகளில் உருவாகி வரும் அவரது 41வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதுவரை ‘DQ41’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகி வந்த இப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி சீருடையில் மொட்டை […]

கமல் சாருடன் நடிக்க வேண்டும் – யோகி பாபு ஆசை!

நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார். யோகி பாபுவுடன் அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, எம். சௌந்தர்யா சரவணன், ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜா, படத்தொகுப்பை […]

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் புதிய அதிரடி போஸ்டர் வெளியீடு!

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Zee Studios மற்றும் MIG Production இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மனித உடல்நலத்தில் நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் ஏற்படுத்தும் தீவிர […]

ஏலகிரி மலைவாழ் மக்களின் வாழ்வியலை பேசும் புதிய திரைப்படம்!

Tam’s Consultancy தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தமிழ்வாணன் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘Production No: 2’. இப்படத்தை, 2017-ம் ஆண்டு வெளியான ‘போங்கு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஜ் இயக்குகிறார். ஏலகிரி மலையில் வாழும் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களுக்கு நேர்ந்த அநீதிகளை உண்மைத் தன்மை மாறாமல் பதிவு செய்யும் படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. பொதுவுடைமை கொள்கைகளின் தாக்கம், சமூக பாகுபாடுகள், கல்வி மற்றும் […]

சினிமா பாடகியாக அறிமுகமாகும் வில்லுப்பாட்டு மாதவி!

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய கலைஞர் மாதவி, தற்போது திரையுலகில் பாடகியாக அறிமுகமாகிறார். தென் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் மாதவியின் வில்லிசை நிகழ்ச்சி இடம்பெற்றால், ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருவது வழக்கம். தனது தனித்துவமான குரல் மற்றும் நாட்டுப்புற இசை பங்களிப்புக்காக பல விருதுகளை பெற்றுள்ள மாதவி, பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகிறார். இந்நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் பாடகியாக களமிறங்குகிறார். […]