Sandakari Official Trailer
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Browsing author
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
இந்திய இசை உலகின் அழியாத அடையாளமாகத் திகழ்ந்த பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகிறது. மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து இசையால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை, இனி சினிமா வழியாக உலகம் முழுவதும் சென்றடைய உள்ளது. பல ஆண்டுகளின் […]
V6 Film Pvt Ltd சார்பில் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிச்செழியன், தனது முதல் படத்திலேயே விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு […]
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமான ‘ஃபீல் மை லவ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், பல பான் இந்தியா திரைப்படங்களை வெளியிட்டவருமான தயாரிப்பாளர் A.N. பாலாஜி, முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’. ஹரி பிரகாஷ் […]
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இப்படத்தை ‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தலைப்பு அறிவிப்பு […]
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுவதற்கு இயக்குநர் பேரரசு கண்டனம் தெரிவித்துள்ளார். அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ஒரே சீரான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இயக்குநர் பேரரசு கூறுகையில், “தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணமாக ரூ.3,000, ரூ.4,000 என வசூலித்தால் எப்படி? சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் […]
நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘Rise of Mahasakthi’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி.ஆர்.சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ.கருப்பையா, […]
தேசிய விருது பெற்ற இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாய்ரா’ திரைப்படத்தில் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜங்லீ பிக்சர்ஸ் மற்றும் டாக்டர் ஜெயந்திலால் கடா தலைமையிலான பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், வரும் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், ‘டாய்ரா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. குற்றம், நீதி மற்றும் தண்டனை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. […]
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், […]