Browsing author

Suresh Kandasamy

அரசன் படத்திலிருந்து அனிருத் விலகலா? – தயாரிப்பாளர் தாணு பதில்!

‘அரசன்’ திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிவிட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பதிலளித்துள்ளார். ‘அரிகொம்பன்’ திரைப்படத்தின் யானை மாதிரியைத் தமிழகம் முழுவதும் சுற்றி வரும் நிகழ்வைத் தொடங்கி வைத்த தாணு, அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ‘அரசன்’ படத்தின் முன்னோட்டக் காட்சி விமர்சனங்களைச் சந்தித்தது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அந்த வீடியோ யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து, அனிருத் ‘அரசன்’ […]

பெண் குழந்தைகளின் கனவுகளையும் குடும்ப ஆதரவையும் பேசும் ‘AOT’… துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT). கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தை லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். இதில் துல்கர் சல்மானுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அறிமுக நடிகை சாத்விகா வீரவல்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் […]

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே படத்திற்கு இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் உற்சாகம்!

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்திற்காக உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் முன்பதிவைத் தொடங்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #OpenDoomsdayBookings என்ற ஹேஷ்டேக்கில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ரசிகர்களின் இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து தற்போது முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. படம் […]

20 ஆண்டுகால ‘சூப்பர் சிங்கர்’ பயணம்… 12-வது சீசனில் அதிரடி மாற்றம்!

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் விருப்பமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சூப்பர் சிங்கர்’, தனது 20 ஆண்டுகால இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், 12-வது சீசனுடன் புதிய பரிமாணத்தில் களமிறங்குகிறது. ‘சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்ட அறிமுக ப்ரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. இந்த சீசனின் சிறப்பம்சமாக, கடந்த காலங்களில் போட்டியாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் பங்கேற்று, தற்போது திரையிசையில் முன்னணி பின்னணிப் பாடகர்களாக உயர்ந்துள்ள முன்னாள் நட்சத்திரங்கள் நடுவர்களாகக் […]