Browsing author

Suresh Kandasamy

ஓ.டி.டி.யில் வெளியானது ‘கார்மேனி செல்வம்’

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இடம்பெற்றுள்ளனர். நிதி நெருக்கடியால் வாழ்க்கையில் போராடும் ஒரு ஓட்டுநர், தனது […]

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் படப்பிடிப்பில் விபத்து!

சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் நடைபெற்று வந்த நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவின் ‘கில்லர்’ திரைப்பட படப்பிடிப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, படத்தின் முக்கியமான வெடிகுண்டு வெடிப்பு (Bomb Blast) காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதிகாலை சுமார் 5 மணியளவில் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த விபத்தில் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி […]

ஜூன் 25-ல் வெளியாகும் ‘அந்தரன்’!

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘அந்தரன்’. ஜூன் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் பிரஜினுடன் இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹரி எஸ்.ஆர் இசையமைத்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரித்துள்ளார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சி.வி. […]

“அங்கீகாரம்” படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘Contempt of Time’ என்ற தலைப்பில் வெளியான இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்தப் பாடலை புகழ்பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார். சட்டம், நீதி, அங்கீகாரம் மற்றும் சமூகத்தின் முரண்பாடுகளை […]

மலையாள திரையுலகில் அறிமுகமாகும் கெனீஷா

இண்டி இசை உலகில் தனது தனித்துவமான குரல் மற்றும் உணர்வுப்பூர்வமான பாடல்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பாடகி கெனீஷா, தற்போது தனது இசைப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவர், ‘Mud Fish’ திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகிறார். சுயாதீன இசை மற்றும் உலகளாவிய மேடை நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள கெனீஷா, தற்போது திரைப்பட இசை உலகிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராக உள்ளார். அவரது மாலிவுட் அறிமுகம் […]

சிவராஜ்குமார்‌ உடன் இணைந்து நடிக்கும் அபிஷன் ஜீவிந்த்!

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் அர்த்தமுள்ள பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தயாரிப்பாளர் பாலமுருகன்.அ தலைமையில் தொடங்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் ‘டிராமா கம்பெனி’ தனது முதல் திரைப்படத்தை பிரம்மாண்டமாக அறிவித்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக ஷிவானி நாகாரம் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் […]