‘ரெட் லேபிள்’ படத்தின் கதை பற்றி இயக்குநர் அப்டேட்..

சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வரவேற்பு பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து சிம்ரன் தனக்கேற்ற அடுத்த படத்திற்கான கதைத்தேர்வில் உள்ளார்.

இந்நிலையில், ‘ரெட் லேபிள்’ என்கிற புதிய படத்தின் கதையும் உருவாக்கமும் பிடித்துப்போய் அதன் முதல் தோற்றத்தை சிம்ரன் வெளியிட்டிருக்கிறார்.

பொன்.பார்த்திபன் கதை, திரைக்கதையில், கே.ஆர்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தின் மூலம் நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் லெனின். நாயகியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஷ் காந்த் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் தெரிவிக்கையில், ‘ரெட் லேபிள்’ என்கிற பெயரைக் கேட்டதுமே டீத்தூள், மது வகை ஆகியவற்றின் வணிகப் பெயர் பலரது நினைவுக்கு வரலாம். ஆனால், அவை இரண்டுமே அல்ல. ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். ஒரு கொலையால், இழந்த அடையாளத்தை மீட்கப் போராடும் சில மனிதர்களின் கதை இது. கோவைதான் கதைக் களம்’ என தெரிவித்தார்.

actress simran has released red label movie first look
actress simranred label moviestoryசிம்ரன்ரெட் லேபிள்