கூலி படத்தில் நடித்தது குறித்து அமீர்கான் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சொல்லித் தருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்த அமீர்கான் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி உள்ளார் அதாவது ரஜினி சாருக்காக மட்டுமே இந்த படத்தில் நடித்ததாகவும் என் கதாபாத்திரம் படத்தில் எதற்கு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது மட்டுமில்லாமல் என் கதாபாத்திரம் அப்படி என்ன செய்தது என எனக்கே தெரியவில்லை ஆனால் நடித்து விட்டேன் நான் இது போல் நடித்தது ஒரு பெரிய தவறு இனிவரும் காலங்களில் கவனமாக இருப்பேன் என கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவரது கதாபாத்திரம் குறித்து உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.