அமீர்கான் கண்கலங்கினார்: விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

11-ந்தேதி வெளியாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் பற்றிப் பார்ப்போம்..

விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வரும் 11-ம்தேதி இப்படம் ரிலீஸாகிறது.

முழுக்க முழுக்க ரொமாண்டிக் எண்டர்டெய்னர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இது குறித்து, நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், தெரிவிக்கையில்,

‘புதுமுக இயக்குநர்களுடன் தான் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். ஏனெனில், அவர்களிடம் தான் ஒரு மேஜிக் இருக்கும். அந்த மேஜிக் இந்த படத்தில் இருக்கக்கூடிய அனைத்து புது முக நடிகர்களிடமும் இருக்கிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அது இருந்தால் அடுத்தடுத்து நிறைய புதுமுகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன்.

நான் புதுமுகமாக திரையுலகில் வந்த பொழுது எனக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இன்று கடவுள் புண்ணியத்தில் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் இடத்திற்கு வளர்ந்திருக்கிறேன்.

உங்களுக்கு ஒரு அப்டேட்! என்னுடைய அடுத்த படம் ‘கட்டாகுஸ்தி2’. ‘ராட்சன்2′ படமும் அடுத்த வருடம் என்னுடைய தயாரிப்பில் நிச்சயம் நடக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமீர்கான் பாராட்டிவிட்டு கண்கலங்கினார். என் தம்பி ரொம்பவே லக்கி. என் தம்பி அறிமுகமாகும் படத்தில் நானும் ஹீரோவாகவே நடித்திருப்பது மகிழ்ச்சி’ என்றார்.

actor aamir khan praises oho enthan baby movie
actor aamir khanactor vishnu vishaloho enthan baby movieஓஹோ எந்தன் பேபிவிஷ்ணு விஷால்