புத்தாண்டில் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் குட் பேட் அட்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தையும் குட் பேட் அக்லி இயக்கிய ஆதிக் தான் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில் புத்தாண்டு அஜித் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுக்கப் போகிறது என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
அந்த வகையில் ஜனவரி மாதம் ஏகே 64 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும். மேலும் மங்காத்தா திரைப்படமும் ஜனவரி இறுதியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இது மட்டும் இல்லாமல் பிப்ரவரி மாதம் அஜித் 64 படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அடுத்த ஆண்டு முதலே அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.