Pushpa 2

‘விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை’: போஸ் வெங்கட்டுக்கு இயக்குநர் அமீர் அறிவுறுத்தல்

போஸ் வெங்கட்டுக்கு, இயக்குனர் அமீர் கொடுத்த பதிலடி வைரலாகி வருகிறது. இது குறித்த பதிவினை காண்போம்..

தளபதி விஜய் சினிமாவில் இருந்து விலகி, முழு நேர அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் இருந்த பலர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், விமர்சனம் செய்வதும் தொடர்கிறது.

இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் பக்கத்தில், விஜய்யின் பேச்சு குறித்து மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அவரது எக்ஸ் பக்கத்தில்,

‘யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..” என குறிப்பிட்டிருந்தார்.

விஜய்யின் அரசியல் கன்னிப்பேச்சு குறித்து போஸ் வெங்கட் செய்த விமர்சனம் பேசுபொருளாக மாறியது. இது தொடர்பாக, இயக்குநர் அமீர் கூறியிருப்பதாவது,

‘இயக்குநர் போஸ் வெங்கட்டின் எக்ஸ் தளப் பதிவினைப் பார்த்தேன். அது மிகவும் கண்ணியக் குறைவாக உள்ளது. ஒரு பொதுவெளியில், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பண்ணனும்.. என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்க கூடாது.

நீங்கள் விமர்சிக்கும் அளவிற்கு விஜய் தரம் தாழ்ந்தவர் இல்லை. விஜய்யை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

இத்தனை லட்சம் பேரை காசு கொடுக்காமல், ஒற்றைச் சொல்லில் அழைத்து வந்துள்ளார். நீங்கள் வேறு விதமாக விமர்சனம் செய்திருக்கலாம், போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையதல்லை’ என அறிவுறுத்தி உள்ளார்.

அமீரின் இந்தக் கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, விஜய் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.