தொடரும் அமரன் படத்தின் வசூல் சாதனை.. இதுவரை எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் வசூல் சாதனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

amaran movie collection update viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள், பிரபலங்கள், விமர்சகர்கள் என அனைவரும் இந்த படத்தை பாராட்டி தள்ளி வருகின்றனர். தீபாவளி அன்று வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை 308 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வரும் அமரன் படத்தின் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

amaran movie collection update viral