நாகார்ஜுனா வீட்டு மணவிழா: அகில்-ஜெயினப் ஜோடிக்கு, வாழ்த்துகள் குவிகிறது

Web Ads

நாகசைதன்யாவின் தம்பி அகிலின் காதல் திருமணம் இன்று இனிதாய் நிகழ்ந்தது. இது பற்றிய கோலாகல நிகழ்வுகள் பார்ப்போம்..

நாகார்ஜுனாவுக்கு நாக சைதன்யா, அகில் அகினேனி என இரண்டு மகன்கள். முதல் திருமணம் மூலம் பிறந்த நாக சைதன்யாவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து, இளைய மகன் அகில் அகினேனிக்கும், அவர் காதலித்த பெண்ணான ஜெய்னப் ராவ்த்ஜிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் அகில், ஜெய்னப் திருமணம் இன்று ஜூன் 6-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ஹைதராபாத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, அவரின் மகன் ராம் சரண், உபாசனா, இயக்குநர் பிரசாந்த் நீல் கலந்து கொண்டனர்.

Web Ad 2

திருமணத்தில் இரு வீட்டாரும், திரையுலகை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டு அகில், ஜெய்னப் தம்பதியை வாழ்த்தினர். முன்னதாக, மாப்பிள்ளை அழைப்பின்போது, நாக சைதன்யா, நாகர்ஜுனா, அகிலும் கூட டான்ஸ் ஆடினார்கள்.

ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஜுல்ஃபி ராவ்த்ஜியின் மகள் ஜெய்னப். ஓவியரான இவர், ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். ‘ஜெய்னபுக்கு 39 வயதாகிறது. இந்நிலையில் தன்னை விட 8 வயது சிறியவரான அகில் அகினேனியை திருமணம் செய்கிறாரே’ என வலைதளங்களில் விமர்சித்தனர்.

அகிலுக்கு ஜெய்னபை பிடித்திருக்கிறது. அது தான் முக்கியம். வயது வித்தியாசம் முக்கியமில்லை. இதை பெரிதாக பேசுவது தவறு என்கிறார்கள் நாகர்ஜுனா குடும்ப ரசிகர்கள். அகில்-ஜெய்னப் ஜோடி என்றும் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் எனவும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.