அஜித் நடிக்கும் ‘ஏகே64’ நவம்பரில் ஷுட்டிங்..
‘ஏகே64’ படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது அடுத்தம் பற்றித் தெரிவிக்கையில்,
அதாவது, அஜித் கார் ரேஸில் கலந்துகொண்ட போது, இரண்டு, மூன்று மாதங்களில் அவரது கார் மூன்று முறை விபத்துக்குள்ளானது. இந்நிலையில், அஜித் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
சினிமா மற்றும் கார் ரேஸ் இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால், ரேஸ் நடைபெறும் காலங்களில் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக அஜித் தெரிவித்துள்ளார்.
கார் ரேஸ் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதற்கு உடற்தகுதி மிகவும் அவசியம் என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தும்போது, முதலில் உடல் ரீதியாக தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்ததாகவும் அஜித் கூறினார்.
நீச்சல், சைக்கிளிங் மற்றும் பிற உடற்பயிற்சிகள், டயட் போன்றவற்றை மேற்கொண்டதன் மூலம், கடந்த எட்டு மாதங்களில் சுமார் 42 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
கார் ரேஸ் சீசன் இருக்கும்போது சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும்,
பந்தயத்தில் பங்கேற்கும்போது பல விபத்துகள் ஏற்பட்டன.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என் படங்களில் ஸ்டண்ட்களை நானே செய்கிறேன். இதனால், எனக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் அதிரடி படங்களை விட்டுவிட முடியுமா? அதேபோல், விபத்துகள் ஏற்பட்டால் ரேஸையும் விட்டுவிட முடியாது. என் பார்வையில் இரண்டும் ஒன்றுதான்.
எனது அடுத்த படம் ‘ஏகே 64’ படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது பற்றிக் குறிப்பிடவில்லை.
