விஷால், திருமணம் செய்யப்போகும் பெண், நடிகை சாய் தன்ஷிகா?

Web Ads

விஷாலின் திருமணம் பற்றித் தற்போது பரவி வரும் தகவல் காண்போம்..

நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல், தன்னுடைய திருமணமும் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக விஷால் தெரிவித்திருந்தார்.

மேலும், தான் கடந்த ஒரு மாதமாக காதலித்து வருவதாகவும், அவருடன் இந்த ஆண்டு தனது திருமணம் நடைபெறும் என்பதையும் சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் யார் என்பதை வெளியிடவில்லை.

Web Ad 2

இந்நிலையில், விஷால் காதலிக்கும் பெண்ணை பற்றிய தகவல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சாய் தன்ஷிகாவை விஷால் காதலித்து வருவதாகவும், அவரையே கரம்பிடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

முன்னதாக, விஷாலும் வரலட்சுமியும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால், கருத்து வேறுபாடால் அவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். அதேபோல், நடிகை லட்சுமி மேனனையும் விஷால் காதலிப்பதாக பேசப்பட்டது. பின்னர் கீர்த்தி சுரேஷை விஷாலுக்காக பெண் கேட்டு சென்றதாக இயக்குனர் லிங்குசாமியே கூறி இருந்தார்.

இச்சூழலில் விஷால் – தன்ஷிகாவை காதலிப்பது உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

vishal and actress sai dhansika to get hitched soon
vishal and actress sai dhansika to get hitched soon