Ajith Decision on Thala 61 Director
Ajith Decision on Thala 61 Director

தல 61 படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Ajith Decision on Thala 61 Director : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என அஜித் கூறியிருப்பதால் 2021 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் அஜித் தன்னுடைய அடுத்த படத்துக்கான இயக்குனரை தேர்ந்தெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

டான்ஸ்ல கில்லி யார்? மாறி மாறி புகழ்ந்து கொண்ட விஜய், சிம்ரன் – பார்க்க பார்க்க சலிக்காத மாஸான வீடியோ!

தல 61 படத்திற்காக முருகதாஸ், விஷ்ணுவரதன், புஷ்கர் காயத்ரி மற்றும் பல இயக்குனர்கள் கதை கூறி உள்ளனர். இவர்களில் விஷ்ணுவர்தன் மற்றும் புஷ்கர் காயத்ரி கூறிய கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து போய் உள்ளது.

இவர்கள் இருவரில் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற இறுதிகட்ட ஆலோசனையில் தல அஜித் தீவிரமாக இறங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்விருவரில் யார் இயக்கினாலும் நிச்சயம் தல 61 மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இவர்களில் யார் அஜித்தை இயக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதை கமெண்ட்ல சொல்லுங்க.