puppy
நடிகர் யோகிபாபு, வருண், சம்யுக்தா ஹெட்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பப்பி டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

Adult comedy film Puppy trailer video – இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்திற்கு பின் தமிழில் தொடர்ந்து வயது வந்தோருக்கான திரைப்படங்கள் ஏராளமாக வெளியாகி வருகிறது.

இந்த வரிசையில் உருவாகியுள்ள திரைப்படம் பப்பி. எப்போதும் காம உணர்வுடன் இருக்கும் கல்லூரி மாணவன் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்து அப்பெண் கர்ப்பமாகி விடுகிறாள். அதன்பின் நடிக்கும் களோபரங்களை மையமாக கொண்டு பப்பி திரைப்படம் உருவாகியுள்ளது.

‘பேட்டை’ பட வசூலை தாண்டிய ‘காப்பான்’ – பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்

இப்படத்தின் டிரெய்லரில் ஏராளமான ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே, இதுபோன்ற திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களை பப்பி திரைப்படம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை முரட்டு சிங்கிள் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் நிஜப்பெயர் தெரியவில்லை. இப்படத்தை எல்.கே.ஜி மற்றும் கோமாளி ஆகிய படங்களை தயாரித்த ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரித்துள்ளார்.

YouTube video