சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான காப்பான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Kaappaan movie box office collection report – கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,மோகன்லால், சாயிஷா, ஆர்யா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் காப்பான்.

சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான திரைப்படங்கள் எதுவும் வெற்றியை பெறவில்லை.

கடைசியாக வெளியான என்.ஜி.கேவும் ரசிகர்களை ஏமாற்றியதால் காப்பான் திரைப்படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கே.வி.ஆனந்த் – சூர்யா காம்பினேஷனில் இது 3வது திரைப்படமாகும்.

யோகிபாபுவிற்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? – யாருடன் நடிக்கப் போகிறார் தெரியுமா?

இந்நிலையில், இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமராக மோகன்லாலும், அவரின் பாதுகாவலாக சூர்யாவும் நடித்திருப்பதால் பரபரப்பான, விறுவிறுப்பான காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இதுவரை ரூ.30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இப்படம் வெளியான முதல் நாளே ரூ.22 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இது ரஜினியின் பேட்ட படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.