yogi babu
பாலிவுட் நடிகர் அமிர்கானுடன் யோகிபாபு ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

Yogibabu acting with amirkhan for bollywood  – தமிழ் சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருபவர் யோகிபாபு. மேலும், கூர்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். தற்போது விஜயுடன் பிகில், ரஜினியுடன் தர்பார் என முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார்? இதோ இறுதிக்கட்ட ஓட்டிங் நிலவரம் – புகைப்படத்துடன்.!

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். 1994ம் ஆண்டு வெளியான ஹாலிட் படம் ஃபாரஸ்ட் கம்ப். இந்த படத்தின் ரீமேக்கில் தற்போது அமீர்கான் நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். தற்போது யோகிபாபுவும் நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. அதற்கான பேச்சைவார்த்தை தற்போது நடந்து வருகிறது. இப்படத்தில் நடிப்பதற்காக தனது கால்ஷீட்டுகளை யோகிபாபு அட்ஜெட்ஸ் செய்து வருவதாகவும், அமீர்கான் படத்தில் நடிப்பது பற்றி விரைவில் அவரே அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.