நடிகை சார்மி தயாரிக்கும் பிரம்மாண்ட படத்தில், விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் அப்டேட் பார்ப்போம்..
விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை-2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
மேலும் ‘கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்’ போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்திய அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் 2 முறை தேசிய விருது வென்ற நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மாச்சிஸ், மற்றும் சாந்தினி பார் ஆகிய படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தபு வென்றுள்ளார்.
டோலிவுட்டில் அனுஷ்கா, கோலிவுட்டில் திரிஷா போல பாலிவுட்டில் தபுவும் முரட்டு சிங்கிள் வுமன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.