பிறந்த நாள் கொண்டாடும் பிரசாந்தின் திரைப்பயணம், தொழிலுலகம்
இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் பிரசாந்த். அவரது சினிமா பயணம் பற்றி, சில தகவல்கள் காண்போம்..
1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலமாக ஹீரோவாக நடித்த முதல் படம் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களாக கமிட் ஆகி, ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் செம்பருத்தி, பாலு மகேந்திரா இயக்கத்தில் வண்ண வண்ண பூக்கள், மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கர் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக ‘ஜீன்ஸ்’ மற்றும் ஜோடி, ஸ்டார், மஜ்னு, குட்லக், வின்னர் என பரபரப்பாக வலம் வந்தார்.
குறிப்பாக விஜய் – அஜித்துக்கு நிகராக திரையுலகில் ஜொலிக்க வேண்டிய பிரஷாந்த், திருமணத்திற்கு பிறகு சரிவை சந்தித்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், ஓராண்டிலேயே விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
கடந்த ஆண்டு பிரசாந்த் ஹீரோவாக நடித்த ‘அந்தகன்’ படம் வரவேற்பை பெற்றது. விஜய்யுடன் சேர்ந்து டித்த ‘கோட்’ படமும் வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில், பிரஷாந்த் இன்று தனது 53-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இன்றைய சினிமா டிரெண்டில் பிரசாந்த் பிஸியாக இல்லைதான். இருப்பினும் பிஸ்னஸ்ஸில் மாதந்தோறும் கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.
சென்னையின் முக்கிய பகுதியான தி.நகரில் ‘பிரசாந்த் கோல்டு டவர்’ என்ற பெயரில் 17 மாடிகள் கொண்ட பிரமாண்ட பில்டிங்கை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் பல முன்னணி நகைக் கடை உள்பட பல கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பிரஷாந்தின் ஆபிஸும் இயங்கி வருகிறது. மேலும், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ள பிரஷாந்த், ஷூட்டிங் ஹவுஸ் ஒன்றையும் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவரிடம் பல சொகுசு கார்களும் உள்ளன.