ரம்யா பாண்டியனுக்கு நடந்து முடிந்த திருமணம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

Web Ads

ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

Actress Ramya Pandian Marriage Photos Viral
Actress Ramya Pandian Marriage Photos Viral

பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்ததால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

தற்பொழுது ரம்யா பாண்டியனுக்கு மத்திய பிரதேசம் மாநிலம் ரிஷிகேஷ், சிவ்புரி கங்கை நதிக்கரையில் அவரது காதலருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது ரசிகர்கள் பலரும் அவருக்கு திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Actress Ramya Pandian Marriage Photos Viral
Actress Ramya Pandian Marriage Photos Viral