
புடவையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரம்யா பாண்டியன் போட்ட பதிவு.!!
புடவையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் பிடித்தார்.
அதனை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அவரது சகோதரர்கள் திருமணம் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். இதனால் பலரும் அவரின் சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன் கணவருடன் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் ஏன் தினமும் சேலை அடைய முடியாது? பாரம்பரிய நேர்த்தி மற்றும் இந்த உணர்வு மீது எனக்கு காதல். என்னை அழகாக்கி என்னை நன்றாக உணர வைத்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram