
சாய் அபயங்கரின் ‘சித்திர புத்திரி’ பாடல்: ஒரு நாளிலேயே 3 மில்லியன் வியூஸ்..
இளம் இசையமைப்பாளர் அபயங்கர் வெளியிட்டுள்ள “பாடல்” செம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் இளவரசியாக நடித்துள்ள ‘லக்கி குயின்’ மீனாட்சி சௌத்ரி கூறிய வெற்றியின் ரகசியம் குறித்தும் பார்ப்போம்..
மீனாட்சி சௌத்ரி கடந்த ஆண்டில் விஜய் மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து கோட் மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் வெளியாகின. இந்த இரு படங்களுமே மீனுவுக்கு லக்காகவே அமைந்தன.
இது தொடர்பான வெற்றிக்கு மீனாட்சி சவுத்ரி கூறும்போது, ‘வெற்றியை அடைவதற்கு அழகு, திறமை போன்ற எதுவும் தேவையில்லை ஒழுக்கம் இருந்தால் போதும். ஒழுக்கத்துடன் கூடிய கடின உழைப்பு நம்மை உச்சத்தில் கொண்டு நிறுத்தி விடும். யாரும் நம்முடைய வெற்றியை தடுத்துவிட முடியாது.
அழகு, திறமை அதிகமாக உள்ளவர்களும் ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு வெற்றி சாத்தியப்படாது. அத்தகைய நபர்களுடன் எளிதாக போட்டியிட்டு வெற்றி பெற முடியும்’ என கணித்துள்ளார்.
இந்நிலையில், சாய் அபயங்கர் இசையமைத்துள்ள ‘சித்திர புத்திரி’ பாடலிலும் அவருடன் இணைந்து ஆடியுள்ளார். இந்தப் பாடலில் “புதையலை தேடிப்போகும் சாய் அபயங்கருக்கு புதையலாக மீனாட்சி சௌத்ரி கிடைக்கிறாள்” என்ற கான்செப்டில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இளவரசியாக, மிகவும் அழகாக இந்த வீடியோ பாடலில் வளைந்து நெளிகிறார் மீனு. இப்பாடல் வெளியான ஒரு நாளிலேயே 3 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
