ஹீரோயின் விஷயத்தில், சிம்புவை ஃபாலோ செய்கிறாரா தனுஷ்?

‘பளிங்கு சிலை’ கயாடு லோஹர் நடிக்கும் படங்களின் தகவல்கள் காண்போம்..
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் கயாடு லோஹர் செகன்ட் ஹீரோயினியாக வந்து போனார். ஆனாலும், அவரது மார்க்கெட் களை கட்டுகிறது.
தற்போது ‘இதயம் முரளி’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் கயாடு லோஹர் அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘இம்மார்டல்ஸ்’ படத்தில் பாத் டப் கிளாமராய் தாராள கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
அடுத்ததாக, சிம்புவின் 49-வது படத்திலும் கயாடுதான் ஹீரோயின் என அறிவிப்பு வெளியாகி படப் பணிகள் தொடங்கி விட்டன.
இந்நிலையில் ‘போர்த்தொழில்’ படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திலும் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என கூறப்படுகிறது.
மேலும் ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் படத்துக்கும் கயாடு லோஹர் தான் ஹீரோயின் எனவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
